என் மலர்
திருப்பத்தூர்
- முதியவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் குட்டை புள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பூனை யாழரசன். இவரது மனைவி பிரதீபா (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் எனது கணவர் யாழரசனுக்கு சொந்தமான மொபட்டை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் திருப்பதியுடன் (56) சேர்ந்து அடமானம் வைத்து மது குடிப்ப தற்கு செலவு செய்து உள்ளனர்.
மீதமுள்ள பணத்தை எனது கணவரின் நண்பர் திருப்பதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதை எனது கணவர் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டு, யாழரசனை திருப்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
- முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
- கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்.
திருப்பத்தூர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை, சிவகங்கை, ஆகிய 5 நகராட்சிகளும், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, கமுதி, அபிராமம், இளையான்குடி, திருப்பத்தூர், நெற்குப்பை, உள்ளிட்ட 11 பேரூராட்சி களும், 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 3,163 கிராமங்களும் பயன்பெற்று வருகின்றன.
இதற்காக தினமும் திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலமாக இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை அருகே பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும், பஸ்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். குழாய் உடைப்பின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து திருச்சியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிகிச்சை பலனளிக்கவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 15-ந் தேதி கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக் நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவானது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.
நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை ஈரோட்டில் உள்ள மருத்துவமனை நடத்தி யது. முகாமை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.பிரகாஷ் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
- சிறையில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) ஷூ கம்பெனி தொழிலாளி.
அதே பகுதியில் முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (21) என்பவரும் இறுதி ஊர்வலத்தில் சென்றார். அப்போது சிவகுமாருக்கும், சாமுவேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரமடைந்த சாமுவேல் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிவகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- 28 கிலோ சிக்கியது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே திருநெல்வேலி ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் இருந்தது. அந்தப் பைகளை சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பயணிகளிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பை யாருடையது என்பது தெரியவில்லை. ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.
திருநெல்வேலி போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் இரண்டு பைகளில் இருந்த கஞ்சாவை ஒப்படைத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் கஞ்சாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது
- வாகன ஓட்டிகள் அவதி
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் விளையாட்டுக் கூடங்கள் அமைந்துள்ளன.
மேலும் அரசு சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளன. கடந்த 2 நாட்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் அதிக கூட்டம் நெரிசலோடு காணப்பட்டன.
நேற்று இங்கு உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் கூட்டத்தால் அலைமோதின. நேற்று மாலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பும் போது ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
- குளிக்கச் சென்றபோது பரிதாபம்
- டாக்டர் இல்லாததே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகன் திவாகர் (வயது 12).
முருகன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் குடும்பத்துடன் சென்று அங்கு வேலை செய்து வந்த தாக கூறப்படுகிறது.
திவாகர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோ வில் பகுதியில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர்.
திருவிழா முடிந்து நேற்று முருகன், திவாகர் மற்றும் உற வினர்களுடன் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.
அப்போது திவாகர் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட தந்தை மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு ராமநாயக் கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திவாகர் பரிதாபமாக இறந்தார்.
இதனை அறிந்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி பார்ப்போரை நெஞ்சை உருக்கியது.
இச்சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை
- உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலையில் பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை வரை செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
ஒவ்வொரு வளைவுகளுக்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் போது இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.
ஏலகிரி மலையில் கோடை விழா மே மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மற்றும் கோடை விழா அரங்கம் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.
கோடை விழா இந்த ஆண்டு நடத்துவதற்காக பணிகள் குறித்து கடந்த வாரம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று மாலை ஏலகிரி மலை பகுதியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, கோடை விழா அரங்கம் மற்றும் படகு இல்லங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியாசதிஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே சதிஷ்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
- விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை, மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4,.6 லட்சம் அரசு மான்யத்தில் ரூ.1,70 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் இரண்டு விவசாய் பயனாளிகளுக்கு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து பேசினார்.
வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரா.ஆனந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். வளர்மதி, மாவட்ட, வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் விசாரணை
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியில் உள்ள ஒரு கிணற் றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீ சார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டு விசாரித்தனர்.
இதில் பிணமாக கிடந்தவர் வாணியம்பாடியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 35) என்பது தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள னர். பின்னர் சத்யராஜ் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






