search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் கலெக்டர் ஆய்வு
    X

    ஏலகிரி மலையில் இயற்கை பூங்காவில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    ஏலகிரி மலையில் கலெக்டர் ஆய்வு

    • கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை வரை செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    ஒவ்வொரு வளைவுகளுக்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் போது இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.

    ஏலகிரி மலையில் கோடை விழா மே மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மற்றும் கோடை விழா அரங்கம் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

    கோடை விழா இந்த ஆண்டு நடத்துவதற்காக பணிகள் குறித்து கடந்த வாரம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று மாலை ஏலகிரி மலை பகுதியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, கோடை விழா அரங்கம் மற்றும் படகு இல்லங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியாசதிஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே சதிஷ்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×