என் மலர்
திருப்பத்தூர்
- கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 55 கடைகள் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.
இதனால் ஆய்வு, தணிக்கை, கண்காணிப்பு பணிகளை துரித , மாகமேற்கொள்ளவும், அரசின் நலதிட்டங்களான பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண பொருட்கள், இலவச வேட்டி, சேலை வினியோகம் ஆகிய பணிகளை சிறப்பாக மேற் கொள்ள ஏதுவாகவும், நிர்வாக வசதிக்காகவும், வேலூர் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் (கற்பகம்) நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 55 ரேஷன் கடைகள் திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் நேற்று முதல் செயல்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.
- அதிகாரிகள் யாரும் வரவில்லை
- சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட8-வது வார்டு, குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலையை சமன் செய்து ஜல்லி கற்கள் கொட்ட ப்பட்டது.
தற்போது சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் சாலை பணியை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்தநிலையில் நேற்று திடீரென அப்பகுதி மக்கள் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
- பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் நிம்மதி
- பொதுமக்கள் பாராட்டு
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மடவாளம் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்பு (வயது 45) ஓட்டி வந்தார்.
மங்களம் கூட் ரோடு அருகே வந்தபோது டிரைவ ருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது.
சமாளித்தவாறே ஒரு வழியாக ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததும் பஸ்சை நிறுத்தி னார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தண்ணீர் தெளித்து கண்டக்டர் எழுப்பி ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
டாக்டர் சுமிதா அவரை பரிசோதனை செய்ததில் ரத்த கொதிப்பு அதிகமாக இருந் தது. மேலும் சர்க்கரை வியாதி இருந்தது தெரியவந்தது. இத னால் தான் டிரைவருக்கு தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
இதனையடுத்து சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க கூறி னார். இது சம்பந்தமாக திருப்பத் தூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
மாற்று டிரைவர் இல்லாத தால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் நீங் களே பஸ்சை ஓட்டி வாருங் கள் என டிரைவர் அன்புவி டம் கூறிவிட்டனர்.
சற்று நேர ஓய்வுக்கு பின் பஸ்சை டிரைவர் அங்கிருந்து பயணிகளுடன் திருப்பத்தூருக்கு ஒட்டி வந்தார். தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர் எனினும் சற்று தொலைவு கழித்து ஆபத்தான கொண்டை ஊசி விளைவு பகுதியில் வரும்போது மயக்கம் ஏற்பட்டு இருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் சாமார்த்தியமாக செயல்பட்டு பஸ்சை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தியதால் விபரீதம் தவிர்க்கப் பட்டது.
இதனால் பயணிகள் தாமதம் ஆனாலும் டிரைவரின் சாமார்த்தி யத்தை பாராட்டி நன்றி தெரிவித்து நிம்மதி அடைந்தனர்.
- உறவினர் வீடு என்று கூறியதால் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி கிராமம், கிழக்குமேடு பகுதி சேர்ந்தவர் தானம்மாள் (வயது 60), தொழிலாளி.
இவர் தனது மகன் ராமு (40), மருமகள் தர்ஷினி (33) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், தானம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
அதன்படி நேற்று தானம்மாள் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு, வீட்டின் அருகில் உள்ள மர நிழலில் உட்கார்ந்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் வேகமாக வந்து வீட்டின் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டிருந்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தானம்மாள், மருமகள் தர்ஷினி மர்ம நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தர்ஷினி மர்ம நபரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அப்போது அந்த நபர் இது என்னுடைய பெரியம்மா வீடு தான். நான் அடிக்கடி இங்கு வருவேன் என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த தர்ஷினி, மாமியார் தானம்மாவை அழைத்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட நபர் திருடிய நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அங்கு 100 நாள் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த சொக்கன்வட்டம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (22) என்பதும், அவர் தானம்மாள் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர் ஓட்டி வந்த பைக்கும் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பதியை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை மீட்டு தானம்மாளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் திருப்பதியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடந்தது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆம்பூர் டெக் துத்திப்பட்டு சி.இ.டி.பி பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பண்புகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இவர்களுடன் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உடலை வாளியில் அள்ளிச்சென்ற பரிதாபம்
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே மேல்பள்ளி கொயக்கமேடு என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கதக்க வாலிபர் கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் சாலை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது.இதில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவ்வழியாக தொடர்ந்து சென்ற வாகனம் அந்த உடல் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதறி உருக்குலைந்து காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சிதறி கிடந்த உடலை சேகரித்து வாளியில் போட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் முகம் மற்றும் உடல் முழுவதும் சிதைந்த இருப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
மேலும் இது குறித்து போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
சத்யா (வயது 60) என்பவர் தன் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- முதியவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பெரியமோட்டூர் குட்டை புள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பூனை யாழரசன். இவரது மனைவி பிரதீபா (வயது 31). இவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் எனது கணவர் யாழரசனுக்கு சொந்தமான மொபட்டை அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் திருப்பதியுடன் (56) சேர்ந்து அடமானம் வைத்து மது குடிப்ப தற்கு செலவு செய்து உள்ளனர்.
மீதமுள்ள பணத்தை எனது கணவரின் நண்பர் திருப்பதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அதை எனது கணவர் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக் குள் தகராறு ஏற்பட்டு, யாழரசனை திருப்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
- முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
- கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்.
திருப்பத்தூர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை, சிவகங்கை, ஆகிய 5 நகராட்சிகளும், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, கமுதி, அபிராமம், இளையான்குடி, திருப்பத்தூர், நெற்குப்பை, உள்ளிட்ட 11 பேரூராட்சி களும், 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 3,163 கிராமங்களும் பயன்பெற்று வருகின்றன.
இதற்காக தினமும் திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலமாக இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை அருகே பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.
இதனால் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும், பஸ்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். குழாய் உடைப்பின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து திருச்சியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- சிகிச்சை பலனளிக்கவில்லை
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 15-ந் தேதி கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக் நிலை தடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்காணிப்பு கேமராவில் பதிவானது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜெயந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 32). இவருக்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தங்களது வீட்டின் வெளியே வழக்கம் போல் நிறுத்தி வைத்து இருந்தார்.
நேற்று மாலை அன்பரசு தனது மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது பட்ட பகலில் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அன்பரசு நாட்டறம்ள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அ.தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாமை ஈரோட்டில் உள்ள மருத்துவமனை நடத்தி யது. முகாமை கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.பிரகாஷ் தலைமையிலான மருத்துவர்கள் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






