என் மலர்
தேனி
- போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.
- 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.
அதில் வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது33), கவுதம் (33), குரங்குமாயன் தெருவை சேர்ந்த கார்த்திக் (29), சூரியன் (34) ஆகியோர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். போலீசார் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர்.
இதேபோல் கூடலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பாலு (71) என்பவர் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
- குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் 2 தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி லெட்சுமிபுரம் நடுத்தெரு வைச் சேர்ந்தவர் பிரேம்கு மார் (வயது 34). இவருக்கும் இலக்கியா (24) என்பவரு க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரேம்குமார் குடிப்பழக்க த்துக்கு அடிமையானவர்.
சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் சென்றவர் குப்பிநாயக்கன்பட்டி சாலையில் சுய நினை வில்லாமல் கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்துக்கு சென்று தனது கணவரை மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் அருகே உள்ள தாத்தப்பன்குளம் 9-வது வார்டு பகுதியைச் சேர்ந்த வர் ெபான்ராஜ் (49). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழ க்கத்துக்கு அடிமையானவர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்ததால் தனது குடும்ப த்தினருடன் சண்டை போட்டு வெளியே சென்றார்.மீண்டும் அவரை அறிவுரை கூறி அழைத்து வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே பொன்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன.
- பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டத்தில் முதல் போக நெல் விளை ச்சல் அமோகமாக உள்ள தால், அறுவடைக்கான ஏற்பாடுகள் மும்முரமடை ந்துள்ளன. விளைச்சல் திருப்திகரமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப் முதல் பழனிசெட்டி பட்டி வரை இருபோக நெல் சாகுபடிநடைபெற்று வருகிறது. 14,707 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று வரும் விவசாய பணிக்கு, முல்லை பெரியாறு அணை யிலிருந்து கடந்த ஜூன் மாதம் தண்ணீர் திறக்க ப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தலை மதகு விவசாயப் பகுதியான கூடலூரிலிருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கை யன்கோட்டை, வீரபாண்டி என அடுத்தடுத்து விவசாய பணிகள் தொடங்கின. தனியே நாற்று பாவி பின்பு வயல்களில் நடவு செய்ய ப்பட்டன.
நடவு செய்ய ப்பட்ட இந்த நாற்று கள் தற்போது நெல்மணி களுடன் திரட்சியாக காட்சி அளிக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டும் நெல் விளைச்சல் நன்றாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்க்கையன்கோட்டை, க.புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெற்பயிர்கள் அறுவடை பருவத்தை எட்டியுள்ளன. இன்னும் சில வாரங்களில் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரியாறு அணை மூலம் தண்ணீர் போதுமான அளவு கிடைப்பதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நெல் விளைச்சல் இந்த ஆண்டும் திருப்திகரமாக உள்ளது. சில இடங்களில் நீர் திறப்புக்கு முன்பாகவே நடவுப்பணிகள் மேற்கொ ள்ளப்பட்டன. இதனால் குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே அறுவடை தொடங்க வாய்ப்புள்ளது என்றனர்.
- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
- தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.
மேலசொக்கநாதபும்:
தேனி மாவட்டம் போடியில் உள்ள மீன் கடைகளில் கெட்டுப்போன மீன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. அதனைத் தொடர்ந்து இன்று காலை தேனி மாவட்ட மீன்வள த்துறை, போடி நகராட்சி சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள மீன்கள் தரம் உள்ளவையா அல்லது பார்மலின் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உபகரணங்கள் மூலம் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மீன்கள் பாதுகாத்து வைத்திருக்கும் இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது உரிய குளிர்சாதன வசதி இன்றி கெட்டுப்போன நிலையில் துர்நாற்றம் வீசிய மீன்கள் இருப்பு வைக்கப்பட்டி ருந்ததை கண்டறிந்து உடனடியாக அந்த மீன்களை கைப்பற்றினர்.
மேலும் மாலை வேலைகளில் பொரித்து விற்பனை செய்வதற்காக மசாலா தடவி வைக்கப்பட்ட மீன்களும் கெட்டுப்போன பெட்டியில் இருப்பு வைத்து இருந்தது கண்டறியப்பட்டு உணவு பாதுகாப்புத் துறை யினர் அவற்றைக் கைப்பற்றி குளோரின் பவுடர் கொட்டி 25 கிலோ மீன்களை அழித்தனர்.
மேலும் அவர்கள் தடை செய்ய ப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கண்டறிந்து நகராட்சி சுகாதாரத் துறையினர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த னர். இனி இதுபோன்று கெட்டுப் போன மீன்களை வியாபாரம் செய்தாலோ அல்லது விதிமுறைகளை மீறி உணவுப் பொருள்களை பாதுகாப்பின்றி வைக்க ப்பட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
கெட்டுப்போன மீன்களை வைத்திருப்ப தற்காக அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தேனி மாவட்ட மீன்வள த்துறை அலுவலர் பாண்டி யன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா, போடி நகராட்சி சுகாதார த்துறை அலுவலர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார் ஆகியோர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
- நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.
- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் நவீன தொழில்நுட்ப முறையில் ரோபோடிக் செய்முறை பயிற்சிக்கான கூட்டு முயற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்புரையாற்றினார். பள்ளியின் செயலர் மாத்யூ ஜோயல் வாழ்த்தி பேசினார்.
மேலும் விழாவில் எடோவேட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தேவி ஸ்ரீ மற்றும் எமில் ராஜ் ஸ்டான்லி ஆகியோர் பேசினர். பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் கிட் பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது
கூடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பீர்மேடு, குமுளி, தேக்கடி பார்க்கிங் மைதானம், வண்டி பெரியாறு, குட்டிக்கானம், வாகமன், அய்யப்பன் கோவில் ஊராட்சி பகுதிகள், தொடுபுழா, உடும்ப ன்சோலை, ே தவி குளம் உள்பட பல்வேறு பகுதி களில் 37 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பைக், ஆட்டோ க்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் மின் கம்பங்களில் பொருத்த ப்பட்ட சார்ஜிங் பாயி ண்ட்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நரகங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டு ள்ளது. இவை தவிர தொடு புழா, இடுக்கு, மூணாறு ஆகிய பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இடுக்கி மாவட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சார்ஜிங் நிலைய பயன்பாடும் அதிகரித்துள்ளது. மின் கம்பங்களில் இருந்து ஒரு வாகனத்தை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.9.30 வரை செலவாகிறது. ஒரு பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 4 யூனிட் மின்சாரமும், ஆட்டோவுக்கு 4 முதல் 7 யூனிட் மின்சாரமும் செல வாகிறது.
பெட்ரோல், டீசலின் விலையை விட மின்சாரம் சார்ஜிங் கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் மலைப்பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சார்ஜிங் பாயிண்ட் அதிகரிக்க பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
- அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.
கூடலூர்:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதே போல் தேனி மாவட்டத்திலும், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 121.30 அடியாக உள்ளது. வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது. நீர் இருப்பு 2885 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 51.64 அடியாக உள்ளது. வரத்து 408 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2214 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.85 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 89.51 அடியாகவும் உள்ளது. போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த மழை காரணமாகவும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான அரசரடி வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாகவும் மூல வைகை ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வைகை அணையின் நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பெரியாறு 8, தேக்கடி 27.6, போடி 3.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
- உத்தமபாளையம் அருகே பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
தேனி மாவட்டம் மேகமலை ஹைவேவிஸ் எஸ்டேட் பேன்சா காலனியைச் சேர்ந்தவர் மந்திரி மகன் கவுதம் (வயது 22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான மனோஜ் (16), ராஜா (15) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் குமுளி சென்று விட்டு மீண்டும் சின்னமனூர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தனர்.
உத்தமபாளையம் அருகே புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் இவர்கள் வந்து கொண்டு இருந்தபோது வத்தல க்குண்டு அருணாச்சல புரத்தைச் சேர்ந்த ஷர்மா (22) என்பவர் ஓட்டி வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பைக்கில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்ட னர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து கவுதமின் தாய் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
தேவதானப்பட்டி:
இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி தேனி மாவட்டம் தேவதானப்பட்டி இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் தொடங்கி வைத்தார்.
இதில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார் முன்னிலை வகித்தார். பாண்டி, முன்னாள் சேர்மன் ஸ்டாலின் குணா, பேரூர் செயலாளர் திலகர், பேரூர் பொருளாளர் சக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அமைப்பாளர் சேக்அப்துல்லா, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் உமேஷ் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜஸ்டன் திரவியம் மகள் பபிதா (வயது16). இவர் பெரியகுளத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பபிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
- இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
தேனி:
தேனி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கம் சார்பில் சிந்தசிஸ் தேனி-2023 மருத்துவ கண்காட்சி தேனி வெஸ்டர்ன் காட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. கண்காட்சிக்கு தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் ஹனிமன், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைமை அதிகாரி ராமசுந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் ஆலோசகர், முன்னாள் தலைவர் ஜவஹர், தேனி ஆயுஷ் மருத்துவமனை மாரியப்பன், கன்னியாகுமரி மாவட்ட ஹோமியோபதி மருத்துவர் சங்கம் செயலாளர்எபிமோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியினை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் என 11 அரங்குகள் பார்வைக்கு அமைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியில் மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர்கள் பாவலன், ஞானபிரகாசம், தேனி ஹோமியோபதி சங்க தலைவர் ஹனிமன் ஹோமியோ மருத்துவமனை சரவணன், செயலாளர் நாராயணன், பொருளாளர் விஜயராஜன் உள்பட தமிழகத்தில் இருந்து ஏராளமான ஹோமியோபதி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தியாகராஜன், ராஜ்குமார், கார்த்திகேயன், மரகதம் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.






