என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "37 இடங்களில் சார்ஜிங் பாயிண்ட்"

    • பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருவதால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது

    கூடலூர்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட த்தில் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பீர்மேடு, குமுளி, தேக்கடி பார்க்கிங் மைதானம், வண்டி பெரியாறு, குட்டிக்கானம், வாகமன், அய்யப்பன் கோவில் ஊராட்சி பகுதிகள், தொடுபுழா, உடும்ப ன்சோலை, ே தவி குளம் உள்பட பல்வேறு பகுதி களில் 37 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பைக், ஆட்டோ க்களை சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் மின் கம்பங்களில் பொருத்த ப்பட்ட சார்ஜிங் பாயி ண்ட்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நரகங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட்டு ள்ளது. இவை தவிர தொடு புழா, இடுக்கு, மூணாறு ஆகிய பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இடுக்கி மாவட்டத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சார்ஜிங் நிலைய பயன்பாடும் அதிகரித்துள்ளது. மின் கம்பங்களில் இருந்து ஒரு வாகனத்தை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.9.30 வரை செலவாகிறது. ஒரு பைக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 2 முதல் 4 யூனிட் மின்சாரமும், ஆட்டோவுக்கு 4 முதல் 7 யூனிட் மின்சாரமும் செல வாகிறது.

    பெட்ரோல், டீசலின் விலையை விட மின்சாரம் சார்ஜிங் கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் மலைப்பகுதியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சார்ஜிங் பாயிண்ட் அதிகரிக்க பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×