என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு"

    • வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது.
    • அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதே போல் தேனி மாவட்டத்திலும், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர் மட்டமும் அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 121.30 அடியாக உள்ளது. வரத்து 835 கன அடி. நேற்று வரை 600 கன அடி திறக்க ப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 400 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது. நீர் இருப்பு 2885 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்ப ட்டதால் பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியும் குறைந்துள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 51.64 அடியாக உள்ளது. வரத்து 408 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 2214 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.85 அடியாகவும், சோத்துப்பாறை நீர் மட்டம் 89.51 அடியாகவும் உள்ளது. போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்த மழை காரணமாகவும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியான அரசரடி வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாகவும் மூல வைகை ஆற்றில் நீண்ட நாட்களுக்கு பிறகு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் வைகை அணையின் நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பெரியாறு 8, தேக்கடி 27.6, போடி 3.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×