உத்தமபாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் கைது

போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாட்ராயன் தலைமையிலான போலீசார் க.புதுப்பட்டி ரோட்டில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டு க்கொண்டி ருந்தனர். அப்போது சரக்கு வாகனத்தில் வந்த ஒரு கும்பலை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில் வந்த கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த பாண்டி (வயது33), கவுதம் (33), குரங்குமாயன் தெருவை சேர்ந்த கார்த்திக் (29), சூரியன் (34) ஆகியோர் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தனர். போலீசார் கஞ்சா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த னர்.

இதேபோல் கூடலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த பாலு (71) என்பவர் 120 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com