என் மலர்
தேனி
- ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
- சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ் நிலையம் அருகில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் அன்புச்செழியன், அமுதா தம்பதியினர் நடத்தி வருகின்றனர். டாக்டர் அன்புச்செழியன் மாவட்ட குடும்ப நல மருத்துவத்துறையில் இணைஇயக்குனராக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்து வருகிறார்.
வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக மதுரை வருமானவரித்துறை துணை இயக்குனர் மைக்கேல்ஜெரால்டு, தேனி வருமானவரி அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 4 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரி, அவரது வீடு, மற்றும் ஏலக்காய் கடை, தனியார் கட்டுமான நிறுவனம் உள்பட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
போடியில் உள்ள பிரபல ஏலக்காய் வியாபாரியான ஞானவேல் என்பவரின் அலுவலகத்தில் நடந்த சோதனை நேற்று காலை நிறைவடைந்தது. ஞானவேல் அ.ம.மு.க கட்சியில் நகர செயலாளராக இருந்து வருகிறார். மற்ற இடங்களில் சோதனை நிறைவு பெற்றாலும் டாக்டர் அன்புச்செழியன் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது.
ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நர்சுகள் உள்பட அனைத்து பணியாளர்களின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டன. 3 நாட்களாக நடந்த வந்த சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. சோதனை முடிவில் டாக்டர் அன்புச்செழியனுக்கு சொந்தமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போடியில் நடந்த இந்த தொடர் வருமான வரித்துறை சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி த்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 340 மாணவிகள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 50 மாணவியர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது.
தேனி:
தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் இராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (ெபரிய குளம்) ஆகியோர் முன்னி லையில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி த்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2, 3, 4 ஆம் ஆண்டு பயிலும் 1018 மாணவிகள் முதற்கட்டமாக பயனடைந்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, புதுமைப் பெண் 2-ஆம் கட்ட திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 21 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 340 மாணவிகள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 50 மாணவியர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது.
மீதமுள்ள 290 மாணவி யர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. பெண்கல்வியை ஊக்கப்படு த்திடவும், இடைநிற்றலை தவிர்த்திடும் வகையிலும், இளமை திருமணத்தை தடுத்திடும் பொருட்டும், இத்திட்டத்தின் செயல்பாடு கள் அமைந்துள்ளது. கல்லூரிக்கு செல்லும் போது, நேரமின்மை கார ணமாக சில மாணவியர்கள் காலை உணவினை உட்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். உணவினை தினந்தோறும் முறையாக மாணவியர்கள் உட்கொ ள்ளும் போதுதான் தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறுவதுடன், நீண்ட ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
மேலும், பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அந்த குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும். மத்திய, மாநில அரசால் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவ ர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வுகளில் எளிதில் மாணவ, மாணவி கள் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்று அரசால் செயல்படுத்தப்ப ட்டு வரும் திட்டங்களை கொண்டு, மாணவியர்கள் தங்களது கல்வியினையும், வாழ்க்கை தரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
- கடந்த 3 மாதங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.
- கடன் பிரச்சினையால் மனமுடைந்த தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு கடமலைக்குண்டு அருகே தெய்வேந்திர புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் தி.மு.க. கிளைச் செய லாளராக இருந்தார். குமணன் தொழு பகுதியில் டாஸ்மாக் மது பார் நடத்தி வந்தார். கடந்த 3 மாத ங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.
மேலும் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கடன் பிரச்சினை தொடர்பாக மனைவி கவிதாவுடன் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த முருகன் வீட்டின் பின்புறம் இருந்த புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் முருகனின் உடலை பிரேத பரிசோத னைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி:
தேனி அருகே உள்ள நாகலாபுரம் தனியார் பள்ளி முதல்வராக இருப்பவர் செந்தில்குமார் (50). இவரது பள்ளியில் குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 39) என்பவரின் மகன் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் அந்த மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக அருண்பிரகாஷ் அந்த பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருண் பிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருண்பிரகாஷ் குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
மதுரை மாவட்ட வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு, தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் போடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, அரசு மருத்துவரின் வீடுகள், தனியார் கட்டுமான உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், ஏலக்காய் வர்த்தகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி சென்றனர்.
இன்று 2-வது நாளாக தனியார் கட்டுமான உரிமையாளரின் அலுவலகம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்தும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், முடிவில்தான் இதன் உண்மைத்தன்மை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி அருகே உள்ள நாகலாபுரம் தனியார் பள்ளி முதல்வராக இருப்பவர் செந்தில்குமார் (50). இவரது பள்ளியில் குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (வயது 39) என்பவரின் மகன் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் அந்த மாணவருக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து விசாரிப்பதற்காக அருண்பிரகாஷ் அந்த பள்ளிக்கு சென்றார். அப்போது பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாட்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் அருண் பிரகாஷ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருண்பிரகாஷ் குமணன் தொழு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கி காசோலையை கணக்கில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது என கூறி கோர்ட்டில் வழக்கு தொடர முயன்றார்.
- கூடலூர் தெற்கு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடலூர்:
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எழுமலையைச் சேர்ந்தவர் பிச்சைப்பாண்டி (வயது 51). இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அரசு (55) என்பவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 23.10.2022-ந் தேதி அரசுவிடம் பிச்சைப்பாண்டி ரூ.2.50 லட்சம் கடன் பெற்றதாகவும், அந்த பணத்தை 2 மாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிச்சைப்பாண்டி பணமே வாங்காத நிலையில் வங்கி காசோலையை பிச்சைப்பாண்டி கணக்கில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது என கூறி கோர்ட்டில் வழக்கு தொடர முயன்றார்.
இது குறித்து பிச்சைப்பாண்டி, அரசு மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியிடம் சென்று கேட்டபோது அவரை ஜாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து எஸ்.சி.எஸ்.டி. கோர்ட்டில் பிச்சைப்பாண்டி வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் உத்தமபாளையம் டி.எஸ்.பி. அலுவலக கண்காணிப்பில் கூடலூர் தெற்கு போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குழந்தைகளின் அழுகுரல் கேட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
- தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்
தேனி:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 3 குழந்தைகள் என 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிணற்றுக்குள் இருந்து குழந்தைகளின் அழுகுரல் கேட்டு, அப்பகுதியில் வேலை செய்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். போடியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- லாரியில் கருவாட்டு கூடைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ரூ.3 கோடி மதிப்பிலான இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் செக்போஸ்ட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு லாரியில் கருவாட்டு கூடைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 1200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.3 கோடி மதிப்பிலான இந்த கஞ்சா கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்டது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணகாந்த் பல்லா (வயது 52) என தெரியவந்தது.
இதனையடுத்து தேனி மாவட்ட போலீசார் ஒடிசா மாநில போலீசாருடன் பேசி கஞ்சா வியாபாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள மல்கன்கிரி மாவட்டத்தில் கிருஷ்ண காந்த் பதுங்கியிருப்பது தெரியவரவே இன்ஸ்பெ க்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான தனி ப்படை போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து ஆண்டிபட்டிக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஸ் டோங்கரே தெரிவிக்கையில், பிடிபட்ட கஞ்சா வியாபாரி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு, உத்தரபிரதேசம், கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு கருவாடு, மிளகாய்வற்றல் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த பொருள்களுக்கு மத்தியில் கஞ்சாவையும் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
பொதுவாக கருவாடு மற்றும் மிளகாய் வற்றல் அருகில் செல்ல முடியாத அளவிற்கு நாற்றம் மற்றும் நெடி ஏற்படும் என்பதால் அதனை போலீசார் சோதனை செய்ய தயங்கு வார்கள். இதனை சாதக மாக்கிக் கொண்டு பல ஆண்டுகளாக கஞ்சா கடத்தி அதனை விற்பனை செய்து வந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தி இச்சம்பவங்களில் ஈடுபடு பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உடைமைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. இருந்த போதிலும் கஞ்சா எவ்வாறு வருகிறது என்று விசாரணை நடத்தியதில் வெளிமாநில வியாபாரிகள் வந்து செல்வது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- குடும்ப பிரச்சினை மற்றும் மதுப்பழக்கத்தால் பெண் உள்பட 2பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் கூடலூர் 14வது வார்டு ரைஸ்மில் தெருைவ சேர்ந்த முருகன் மனைவி ராஜேஸ்வரி (வயது35). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆஸ்துமா நோய் இருந்ததால் அவ்வப்போது கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராயப்பன்பட்டி அருகில் உள்ள காமயகவுண்ட ன்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன் மகன் முகிலன் (25). இவரது தாய் இறந்து விட்டதால் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருகிறார். முகிலன் தனது தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையானதால் அவரை கண்டித்து வந்தார்.
இந்நிலையில் முகிலன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இரும்பு கம்பியால் தனது மகன் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
கூடலூர்:
தமிழக-கேரள எல்லையான குமுளி அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் பக்கத்து வீட்டில் இருந்து டயர் ஒன்றை எடுத்து தனது வீட்டுவாசலில் எரித்துள்ளார். இதனைபார்த்த சிறுவனின் தாய் கோபத்தில் தனது மகனை சரமாரியாக அடித்தார்.
மேலும் இரும்பு கம்பியால் தனது மகன் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளார். அப்போது சிறுவன் வலியால் அலறவே, அப்போதும் அவனது கண்ணில் மிளகாய் பொடியை வைத்து தேய்த்துள்ளார். சத்தம் வெளியே வரக்கூடாது என்று தனது மகனை கண்டித்துள்ளார்.
அதன்பிறகு சிறுவன் அழுதுகொண்டே தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அப்போது அவ்வழியே சென்ற பெண் சிறுவனை விசாரித்தபோது தனது தாயார் தனக்கு சூடு வைத்ததுடன் கண்களில் மிளகாய் பொடியை வைத்து தேய்த்துவிட்டதாக தெரிவித்தான். இதுகுறித்து அப்பகுதி பஞ்சாயத்து உறுப்பினர் உள்பட பலருக்கு தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த சிறுவனின் வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியானது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது தான் சேட்டை செய்யும் சமயங்களில் பலமுறை இதேபோன்று தனது தாய் சூடு வைத்துள்ளதாகவும், கடுமையாக தாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சிஅடைந்த போலீசார் சிறார் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் தாயாரை கைது செய்தனர்.
- உறவினர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது32). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது உறவினர் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.
பின்னர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முனீஸ்வரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.






