search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போடியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை
    X

    போடியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற ஆஸ்பத்திரி.

    போடியில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை

    • வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    மதுரை மாவட்ட வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் மைக்கேல் ஜெரால்டு, தேனி மாவட்ட வருமான வரித்துறை அலுவலர் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் போடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி, அரசு மருத்துவரின் வீடுகள், தனியார் கட்டுமான உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், ஏலக்காய் வர்த்தகர்களின் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக நேற்று 4 இடங்களில் ஒரே நேரத்தில் இக்குழுவினர் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டனர். மதியம் 3 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி சென்றனர்.

    இன்று 2-வது நாளாக தனியார் கட்டுமான உரிமையாளரின் அலுவலகம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்தும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், முடிவில்தான் இதன் உண்மைத்தன்மை தெரிய வரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

    போடியில் தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×