search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Innovation Women Project"

    • மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி த்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • 340 மாணவிகள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 50 மாணவியர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது.

    தேனி:

    தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ.க்கள் இராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), சரவணக்குமார் (ெபரிய குளம்) ஆகியோர் முன்னி லையில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி த்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

    தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 2, 3, 4 ஆம் ஆண்டு பயிலும் 1018 மாணவிகள் முதற்கட்டமாக பயனடைந்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, புதுமைப் பெண் 2-ஆம் கட்ட திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 21 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 340 மாணவிகள் பயனடையும் வகையில் முதற்கட்டமாக 50 மாணவியர்களுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டு ள்ளது.

    மீதமுள்ள 290 மாணவி யர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. பெண்கல்வியை ஊக்கப்படு த்திடவும், இடைநிற்றலை தவிர்த்திடும் வகையிலும், இளமை திருமணத்தை தடுத்திடும் பொருட்டும், இத்திட்டத்தின் செயல்பாடு கள் அமைந்துள்ளது. கல்லூரிக்கு செல்லும் போது, நேரமின்மை கார ணமாக சில மாணவியர்கள் காலை உணவினை உட்கொள்ளாமல் இருந்து விடுகின்றனர். உணவினை தினந்தோறும் முறையாக மாணவியர்கள் உட்கொ ள்ளும் போதுதான் தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறுவதுடன், நீண்ட ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

    மேலும், பெண்கள் கல்வி கற்பதன் மூலம் அந்த குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும். மத்திய, மாநில அரசால் பல்வேறு பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறுபவ ர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்போட்டி தேர்வுகளில் எளிதில் மாணவ, மாணவி கள் வெற்றி பெறுவதற்கு தமிழ்நாடு அரசால் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுபோன்று அரசால் செயல்படுத்தப்ப ட்டு வரும் திட்டங்களை கொண்டு, மாணவியர்கள் தங்களது கல்வியினையும், வாழ்க்கை தரத்தினையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ×