என் மலர்tooltip icon

    தேனி

    • மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தேனி:

    தெற்கு மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவின்பேரில் தேனி மாவட்ட போலீசார் 124 குழுக்கள் அமைத்து உட்கோட்ட டி.எஸ்.பி தலைமையில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகனசோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் சிறப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 300 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடி, கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    • காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்து கிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம் புகுந்தது.
    • ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி வனப்பகுதிக்கு இலங்கை, அந்தமான் உள்ளிட்ட கடல் பகுதிகளில் வசிக்கும் பார்ன் இன ஆந்தைகள் இனப்பெருக்கத்திற்காக ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை வரும். இந்த ஆந்தைகளின் விரல் கடினமானதாகவும், விரைப்புடனும் இருக்கும். இந்த வகை ஆந்தை போடி பாரத ஸ்டேட் வங்கி அருகே வந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த காகங்கள் மொத்தமாக சேர்ந்து விரட்டியதால் பயந்துபோன ஆந்தை அங்குள்ள காய்ந்துகிடந்த மரக்கட்டைகளில் தஞ்சம்புகுந்தது.

    இந்த ஆந்தை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆந்தையை மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

    • இங்கு குழந்தைகள் யாரும் வராததால் அங்கன்வாடி மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    • இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ள இடத்தில் குழந்தைகளே இல்லை என்பதை அதிகாரி கள் சொன்னால் நம்பமுடியுமா?

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உள்பட்ட தும்மக்குண்டு, மேகமலை ஊராட்சி பகுதிகள் புலிகள் சரணாலய கட்டுப்பாட்டிற்குள் வருவதாகக்கூறி அங்குள்ள மக்களை வெளியேற்ற கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக செய்து வருவதால் இங்கி ருந்து வெளியேற்றினால் நாங்கள் என்ன செய்வது என அதிகாரிகளிடம் தெரிவித்து வெளியேற மறுத்து வந்தனர்.

    இந்நிலையில் கிராம மக்களை வெளியேற்ற மறைமுக நடவடிக்கையாக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த 2 ஊராட்சிகளிலும் மக்களின் அடிப்படை தேவையாக உள்ள ரேச ன்கடை, பள்ளி, ஆஸ்பத்திரி ஆகியவற்றை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள னர். இதில் முதற்கட்டமாக தும்மக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட வண்டியூர் அங்கன்வாடி மையம் கடந்த 6 மாதமாக மூடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி களிடம் கேட்டபோது இங்கு குழந்தைகள் யாரும் வராததால் அங்கன்வாடி மூடப்பட்டுள்ளதாக தெரி வித்தனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கை யில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப த்தினர் உள்ள இடத்தில் குழந்தைகளே இல்லை என்பதை அதிகாரி கள் சொன்னால் நம்பமுடி யுமா? அவர்கள் எங்களை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சிதான் இது.

    ஏற்கனவே பல பள்ளிகளில் மின்சார இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக அங்கன்வாடி மையத்தை கடந்த 6 மாதமாக செயல்படுத்தாமல் பூட்டு போட்டுள்ளனர். இதனால் இங்குள்ள ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு ள்ளனர். இதுபோல மக்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் மறைமுகமாக ஈடுபட்டால் அனைவரும் ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்படுவோம் என்றனர்.

    • பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார்.
    • வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார்.

    கம்பம்:

    கம்பம் மணி நகரத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் புவனேஸ்வரி (வயது18). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரி திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் மகள் காவியாஸ்ரீ (16). இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார். அதனை அவரது பெற்றோர் விரும்பவில்லை. எனவே வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த காவியாஸ்ரீ திடீரென மாயமானார். இது குறித்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • செல்போன் உபயோகி ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என கண்டித்துள்ளார்.
    • மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார் மனைவி நந்தினி (வயது27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெகதீஸ்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் செல்போனில் அதிக நேரம் பேசுவதாக நந்தினியின் தாயாரிடம் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார். எனவே செல்போன் உபயோகி ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என நந்தினியிடம் கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே மதுராபுரியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (61). இவர் ஷோரூமில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கஜேந்திரன் ராணுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 வருடமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சுற்றித்திரிந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளான ரவிச்சந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பாரதி. இவருக்கும் அவருடைய உறவினரான அருண் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது பாரதி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு பிறக்க இருக்கும் முதல் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சுகப்பிரசவமாக பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பெரியகுளம் டி.எஸ்.பி. கீதா தலைமையில் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னமயில், பெரியகுளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாட்சி தென்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் மற்றும் ஆண் போலீசார் ஒன்றாக இணைந்து ஏட்டு பாரதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    இதில் பங்கேற்ற டி.எஸ்.பி. மற்றும் பெண் போலீசார் பாரதிக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு, வளையல் அணிவித்து, மலர் தூவி குழந்தை நலமுடன் பிறக்க வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் ஏற்பாடு செய்திருந்த 5 வகையான உணவு வகைகளை கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் இருவருக்கும் வழங்கினர். மேலும் போலீஸ் நிலையத்தில் உடன் பணியாற்றும் பெண் காவலருக்கு அனைத்து போலீசாரும் ஒன்று சேர்ந்து தாயுள்ளத்தோடும் சொந்த பந்தங்களாக கூடி நின்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • அரசு, உதவிபெறும்மற்றும் தனியார் மெட்ரிக் என 200 பள்ளிகளை சேர்ந்த 15ஆயிரத்து 43 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
    • தேர்வுகள் 66 மையங்களில் நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 120பறக்கும்படையினர் அமைத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வை 15043 மாணவ-மாணவியர்கள் எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் இன்றுமுதல் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடை கிறது.

    தேனி மாவட்டத்தில் அரசு, உதவிபெறும்மற்றும் தனியார் மெட்ரிக் என 200 பள்ளிகளை சேர்ந்த 15ஆயிரத்து 43 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    இதில் 7ஆயிரத்து 646 மாணவர்கள், 7ஆயிரத்து 397 மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வுகள் 66 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை கண்காணிக்க 120பறக்கும்படையினர் அமைத்துள்ளனர்.

    • பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.
    • மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை அடைந்தள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதிகளில் சுமார் 25000 ஏக்கருக்கு மேல் மா சாகுபடி நடைபெற்று வருகிறது.

    முற்றிலும் மலைகள்சூ ழ்ந்த பகுதிகளில் பெரும்பா லும் இயற்கை நன்னீர் விவசாயத்தில் உற்பத்தியா வதால் தரத்திலும் சுவை யிலும் தென்னிந்தியா விலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்பகுதி மாங்காய் உள்ளது.

    கல்லா மாங்காய், பந்தானவள்ளி, காதர், செந்தூரம், கிளி மூக்கு, மல்கோவா, சப்பட்டைகாசா, இமாம் பசந்த், போன்ற முதல் வகை ஏற்றுமதி ரக மாம்பழங்கள் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மாங்காய் மற்றும் மாம்பழங்கள் பல்வேறு அயல் நாடுகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதிசெய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் மாம்பழ விளைச்சல் மற்றும் விற்பனை அதிகளவில் நடைபெறும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த சூழலில், திடீரென்று ஏற்பட்ட வினோதமான செல் பூச்சி தாக்குதலால் விவசாயிகளின் கனவுகள் கலைந்து போனது.

    பூக்களிடையே உற்பத்தியான செல் பூச்சிகளால் மரத்தில் உள்ள பூக்கள் முற்றிலும் கருகி, பாசி என்னும் பிஞ்சுகள் அனைத்தும் வாடி உதிர்ந்து மரம் முழுவதும் வெறும் குச்சிகளாக மட்டுமே காட்சி அளித்து வருகிறது.

    பல்வேறு பூச்சி மருந்துகள் உரங்கள் இட்டும் மரத்தில் உற்பத்தியான செல் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு விலை அதிகம் இருந்தும் அளவான விளைச்சல் இருந்ததால் ஓரளவிற்கு விவசாயிகள் தாக்கு பிடித்தனர்.

    ஆனால் இந்த ஆண்டு நல்ல விளைச்சலும் விலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் திடீரென்று மரங்களை பாதித்த வினோதமான செல் பூச்சிகள் தாக்குதலால் விளைச்சல் முற்றிலும் சரிந்து, விவசாயிகளும் குத்தகைதாரர்களும் வியாபாரிகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகள் குத்தகைதாரர்கள் வியா பாரிகள் ஏற்றுமதியாளர்கள் மற்றும் லாரி உரிமை யாளர்கள் தொழிலாளிகள் மிகப்பெரும் வருமான இழப்பை சந்தித்து வரு கின்றனர்.

    தற்பொழுது ஏற்பட்டு ள்ள செல் பூச்சி தாக்குதல் மாங்காய் விளைச்சலில் பல்லாயிரக்கணக்கான கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக அரசு வேளாண் துறை மூலம் உரிய நட வடிக்கை எடுத்து மாமரங்களில் ஏற்பட்டுள்ள செல் பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகளும் குத்தகை தாரர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடல்நிலை பாதிப்பு மற்றும் மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள போடேந்திரபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த செல்லையா மனைவி காமாட்சி (வயது 77). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் அங்கு உயிரிாந்தார். வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நாராயண தேவன்பட்டி கள்ளர் பள்ளித்தெருவைச் சேர்ந்த ராஜாமணி மனைவி முத்துலெட்சுமி (வயது 63). கணவர் இறந்து விட்ட நிலையில் முத்துலெட்சுமி தனியாக வசித்து வந்தார். கடந்த 5 வருடங்களாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு 2 கால்களிலும் புண் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேவாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ராஜா (34). இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சம்பவத்தன்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த உதயமூர்த்தி மனைவி லதா (வயது 47). இவர் தனது மகன் பிரசாத் (29)தின் தேவைக்காக கடன் கொடுத்துள்ளார்.

    அந்த கடனை திருப்பிக் கேட்ட போது ஆட்டோ ஓட்டி கழித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் லதா அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பிரசாத் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழக-கேரள எல்லை யில் அமைந்துள்ள மங்கள தேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தமிழகம் மற்றும் கேரள மக்களால் கொண்டாட ப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் தமிழக மற்றும் கேரள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல், கழிப்பிட வசதி, பாதைகளை செப்பனி டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பக்தர்களின் வசதிக்காக கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும். இருமாநில வனத்துறையினர் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைப்பது, பக்தர்கள் 5 லிட்டர் குடிநீர் பாட்டில் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    • குடும்பத்தில் கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வரு கின்றனர்.

    கம்பம்:

    கம்பம் மாலை யம்மாள்புரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சுகன்யா(28). இவர்களுக்கு சுபிக்ஷா என்ற மகளும், சக்தி என்ற மகனும் உள்ள னர். குமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ஜே.சி.பி டிரை வராக பணிபுரிந்த போது சுகன்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தம்பதி இடையே தகராறு நடந்தது. இதனைதொடர்ந்து குமார் வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் மகன் சக்தியை பள்ளிக்கு அனுப்பி விட்டு மகள் சுபிக்ஷாவுடன் சுகன்யா வெளியே சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பா ர்த்தார். எங்கும் கிடைக்க வில்ைல. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் மாலையம்மா ள்புரத்தை சேர்ந்தவர் கோபால் மனைவி விஜயா(47). இவரது மகன் ராம்குமார். திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் விஜயா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமார் கம்பத்திற்கு வந்து தனது தாயை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத தால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயாவை தேடி வரு கின்றனர்.

    ×