என் மலர்
நீங்கள் தேடியது "கிராமத்தினரை வெளியேற்ற முடிவு"
- இங்கு குழந்தைகள் யாரும் வராததால் அங்கன்வாடி மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ள இடத்தில் குழந்தைகளே இல்லை என்பதை அதிகாரி கள் சொன்னால் நம்பமுடியுமா?
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உள்பட்ட தும்மக்குண்டு, மேகமலை ஊராட்சி பகுதிகள் புலிகள் சரணாலய கட்டுப்பாட்டிற்குள் வருவதாகக்கூறி அங்குள்ள மக்களை வெளியேற்ற கடந்த சில மாதங்களாகவே அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் விவசாயத்தை மட்டுமே பிரதானமாக செய்து வருவதால் இங்கி ருந்து வெளியேற்றினால் நாங்கள் என்ன செய்வது என அதிகாரிகளிடம் தெரிவித்து வெளியேற மறுத்து வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்களை வெளியேற்ற மறைமுக நடவடிக்கையாக அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்த 2 ஊராட்சிகளிலும் மக்களின் அடிப்படை தேவையாக உள்ள ரேச ன்கடை, பள்ளி, ஆஸ்பத்திரி ஆகியவற்றை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள னர். இதில் முதற்கட்டமாக தும்மக்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட வண்டியூர் அங்கன்வாடி மையம் கடந்த 6 மாதமாக மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி களிடம் கேட்டபோது இங்கு குழந்தைகள் யாரும் வராததால் அங்கன்வாடி மூடப்பட்டுள்ளதாக தெரி வித்தனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கை யில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்ப த்தினர் உள்ள இடத்தில் குழந்தைகளே இல்லை என்பதை அதிகாரி கள் சொன்னால் நம்பமுடி யுமா? அவர்கள் எங்களை இங்கிருந்து வெளியேற்ற எடுக்கும் முயற்சிதான் இது.
ஏற்கனவே பல பள்ளிகளில் மின்சார இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கி யுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக அங்கன்வாடி மையத்தை கடந்த 6 மாதமாக செயல்படுத்தாமல் பூட்டு போட்டுள்ளனர். இதனால் இங்குள்ள ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டு ள்ளனர். இதுபோல மக்களை வெளியேற்றும் முயற்சியில் அதிகாரிகள் மறைமுகமாக ஈடுபட்டால் அனைவரும் ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்படுவோம் என்றனர்.






