என் மலர்
உள்ளூர் செய்திகள்

போடியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்.
தேனியில் இன்று 10-ம் வகுப்பு அரசு தேர்வை 15,043 பேர் எழுதுகின்றனர்
- அரசு, உதவிபெறும்மற்றும் தனியார் மெட்ரிக் என 200 பள்ளிகளை சேர்ந்த 15ஆயிரத்து 43 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
- தேர்வுகள் 66 மையங்களில் நடக்கிறது. தேர்வை கண்காணிக்க 120பறக்கும்படையினர் அமைத்துள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொது த்தேர்வை 15043 மாணவ-மாணவியர்கள் எழுத உள்ளனர். மாநிலம் முழுவதும் இன்றுமுதல் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடை கிறது.
தேனி மாவட்டத்தில் அரசு, உதவிபெறும்மற்றும் தனியார் மெட்ரிக் என 200 பள்ளிகளை சேர்ந்த 15ஆயிரத்து 43 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில் 7ஆயிரத்து 646 மாணவர்கள், 7ஆயிரத்து 397 மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வுகள் 66 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை கண்காணிக்க 120பறக்கும்படையினர் அமைத்துள்ளனர்.
Next Story






