search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களதேவி கண்ணகி கோவில்: சித்ரா பவுர்ணமி விழா குறித்து ஆலோசனை
    X

    ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    மங்களதேவி கண்ணகி கோவில்: சித்ரா பவுர்ணமி விழா குறித்து ஆலோசனை

    • அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேனி:

    தமிழக-கேரள எல்லை யில் அமைந்துள்ள மங்கள தேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா நடத்துவது குறித்து முன்னேற்பாடு பணிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று தமிழகம் மற்றும் கேரள மக்களால் கொண்டாட ப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற மே மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் தமிழக மற்றும் கேரள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல், கழிப்பிட வசதி, பாதைகளை செப்பனி டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    பக்தர்களின் வசதிக்காக கூடுதல் போலீசார் பணி யமர்த்தப்பட்டு பாதுகாப்பு வழங்க வேண்டும். இருமாநில வனத்துறையினர் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைப்பது, பக்தர்கள் 5 லிட்டர் குடிநீர் பாட்டில் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×