என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கம்பம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்
- பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார்.
- வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார்.
கம்பம்:
கம்பம் மணி நகரத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகள் புவனேஸ்வரி (வயது18). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரி திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே அமச்சியாபுரத்தை சேர்ந்தவர் கண்ணபிரான் மகள் காவியாஸ்ரீ (16). இவர் பிளஸ்-2 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்றார். அதனை அவரது பெற்றோர் விரும்பவில்லை. எனவே வேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த காவியாஸ்ரீ திடீரென மாயமானார். இது குறித்து க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






