தேனி மாவட்டத்தில் சிறப்பு குறைதீர் முகாமில் 300 மனுக்களுக்கு தீர்வு

மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது.ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தெற்கு மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவின்பேரில் தேனி மாவட்ட போலீசார் 124 குழுக்கள் அமைத்து உட்கோட்ட டி.எஸ்.பி தலைமையில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகனசோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் சிறப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர்.

மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 300 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடி, கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com