என் மலர்
சிவகங்கை
மானாமதுரை அருகே தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தியது தொடர்பாக 78 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே அன்னவாசல் கிராமத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமையிலும், கல்குறிச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி தலைமையிலும் தி.மு.க. சார்பில் தடையை மீறி மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மானாமதுரை, சிப்காட் போலீசார் 78 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தேவகோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர், டி.வி. திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கிருந்த டி.வி., கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேவகோட்டை அருகே உள்ள போரிவயல் முத்துக்குமார் என்ற மண்டை (21) கோட்டூர் விஜய் (21) ஆனந்தகுமார் என்ற மணிகண்டன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
காளையார்கோவில் அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலியானார்.
காளையார்கோவில்:
காளையார்கோவில் அருகே உடைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனை. இவரது மகன் முருகன் (வயது 31). இவர் காளையார்கோவிலில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனது 1½ வயது மகனுடன் மானாமதுரையில் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காளையார்கோவிலில் இருந்து மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொல்லங்குடி அருகே சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் அதன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் மிளகாய் சாகுபடி நிலத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் தற்போது பெய்த கனமழையால் மிளகாய் செடிகள் சேதமடைந்து உள்ளது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மிளகாய் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகள் கலெக்டரிடம், மழையால் மிளகாய் செடிகள் அழுகி சேதம் அடைந்து உள்ளன. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பித்த பின் அரசின் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் கலெக்டர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, வேளாண் துறை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர்கள ்சக்திவேல், தர்மர் ஆகியோர் உடன் இருந்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், இடைக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் உதவி பங்குத் தந்தை ஜாலிமரிவளன், முன்னாள் உதவி பங்குத்தந்தை ஒனாசியஸ்பிரபாகரன் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையிலும், காரைக்குடி அருகே அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோதி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காரைக்குடியை அடுத்த ஆவுடைப்பொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமையிலும், தளக்காவூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைஆரோக்கியம் மற்றும் அருட்தந்தை ஜோசப்செங்கோல் தலைமையில் 5 அருட்தந்தையர்கள் இணைந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். காளையார்கோவில் அருகே மருதகண்மாயில் உள்ள புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் அருட்தந்தை ஸ்டானி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேசுராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோல் காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி புனித ஜெபஸ்தியார் ஆலயத்தில் அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் போஸ்கோ மையம் தூய சகாய அன்னை பங்கில் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஜார்ஜ், உதவி பங்குத்தந்தையர்கள் மார்டின், டேனியல், பிரான்சிஸ், லூர்து ஆகியோர் புலியடிதம்மம், பள்ளித்தம்மம், கல்லுவழி, நெடுங்குளம், நெடோடை ஆகிய கிராமங்களில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலியை நிறைவேற்றினர். ஆண்டிச்சியூரணி புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை தைரியநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தரசன்பட்டி புனித பனி மைய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.
கல்லல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கல்லல், மாதவராயன்பட்டி, முத்துப்பட்டி, பனங்குடி, சாத்தர சம்பட்டி, காடனேரி, பாகனேரி உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
எஸ்.புதூர் அசெம்பிளி ஆப் காட் திருச்சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் போதகர் யோகு சரவணன் கலந்து கொண்டு ஜெபம் நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் கலந்து கொண்டார். இதில் ஏ.ஜி திருச்சபை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெறுவது எப்படி? என சிவகங்கை கலெக்டர் தகவல் தெரிவித்து உள்ளார்.
சிவகங்கை:
மாற்றுத்திறனாளிகளின் முழுமையான மறுவாழ்வினை கருத்திற்கொண்டு அரசு பலவகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக செல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பெறுவதற்கும் மற்றும் இதர அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைபடுவதால், அட்டை பெறாத மாற்றுத்திறனுடைய நபர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் அந்ததந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
மருத்துவ முகாம் 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 29-ந் தேதி வரை நடக்கிறது.
இதன்படி வருகிற 30-ந்தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அடுத்த மாதம் 5-ந்தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 6-ந்தேதி திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 7-ந்தேதி இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 8-ந்தேதி தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19-ந்தேதி கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 20-ந்தேதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவமுகாம் நடக்கிறது.
இதே போல 21-ந்தேதி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 22-ந்தேதி எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27-ந்தேதி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 28-ந்தேதி திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 29-ந்தேதி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. மருத்துவ முகாம் காலை 10 மணியில் இருந்து பகல் 1 மணி வரை நடக்கிறது.
எனவே தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் நாளில் பாஸ் போர்ட் அளவு புகைப்படம்-4, மற்றும் ஆதார் கார்டு நகல், மற்றும் குடும்ப அட்டை நகலுடன், கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.
இத்தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பி்க்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
2020-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் 2021-ம் ஆண்டு புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், தற்காலிகமாக பட்டாசு சில்லறை விற்பனைக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் புல வரைபடம், பத்திர ஆவணங்கள் மற்றும் 10 (1) அடங்கல் நகல், ரூ.500-ஐ வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்கார்டு, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஸ்மார்ட் அட்டை), நகராட்சி அல்லது பேரூராட்சி அல்லது ஊராட்சி வரி ரசீது, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளை இணைத்து அனுப்ப வேண்டும்.
அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனைக்குப் பின்னர் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளைந்த நெற்கதிர்களை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி நெல் வயல்களை சுற்றி விவசாயிகள் சேலைகளை கொண்டு வேலி அமைத்துள்ளனர்.
திருப்பத்தூர்:
உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்று கூறுவார்கள். விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் கஷ்டப்பட்டு விளைவித்தாலும் கூட அவற்றை பாதுகாக்க பெரிய அளவில் போராட வேண்டிய நிலை உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியானது வானம் பார்த்த பூமியாக உள்ளதால் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழையானது நன்றாக பெய்து இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே இ்ங்கு விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது. இந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் நெல் பயிரிட்டு உள்ளனர். ஏற்கனவே கண்மாய், வரத்துக்கால்வாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு தயாராக இருந்த காரணத்தினால் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியும், சில கண்மாய்கள் நிரம்பி மறுகால் போனது.
ஏற்கனவே முன்கூட்டியே விவசாயம் செய்த விவசாயிகள் தற்போது அறுவடைக்காக காத்திருந்த நிலையில் இந்த மழையானது நெல் பயிரை முற்றிலும் மூழ்கடித்து ஒருபுறம் விவசாயிகளை வேதனைப்படுத்தியது. மேலும் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழையில்லாததால் அப்போது பயிரிட்ட பயிர்கள் எல்லாம் கருகி போனது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளால் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமும், பெரும் நஷ்டமும் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் கிணற்று பாசனம் மற்றும் மழை நீரை பயன்படுத்தி பயிர்களை போராடி காப்பாற்றி வந்த விவசாயிகளின் நிலத்தில் தற்போது நெல்பயிர்கள் கதிர் விட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இருந்தாலும் ஆடு, மாடு, குரங்கு மற்றும் குருவி, காக்கை, மயில் உள்ளிட்டவைகளால் நெற்பயிர்கள் அதிகளவில் சேதமடைய தொடங்கியது.
இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் புதிய யுக்தியை கையாண்டு உள்ளனர். அதன்படி பறவைகளிடம் இருந்து நெற் பயிரை காப்பாற்றும் வகையில் வயலை சுற்றி சேலைகள் கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். பகல் நேரங்களில் விலங்குகள் தொல்லையும், இரவு நேரங்களில் மயில் உள்ளிட்ட பறவைகள் வயலில் இறங்கி நெல்பயிரை சேதப்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இவ்வாறு அமைத்துள்ளனர். இதனால் எளிதாக வயலில் உள்ளே விலங்குகள் மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க முடியும். இதுதவிர பகல் நேரங்களில் வயல்வெளிகளுக்கு செல்லும் விவசாயிகள் ஒலிகளை எழுப்பியும் நெற்பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தெப்பக்குளம் நிரம்பியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் கோவிலில் இது முதன்மையாக விளங்குவதால் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவதுண்டு. தற்போது கொரோனா ஊரடங்குக்கு பிறகு முககவசம் அணிந்த பக்தர்களுக்கே கோவிலில் அனுமதி அளிக்கப்படுகிறது. முககவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் ஒரு குடைவரை கோவிலாகும். குன்றைக்குடைந்து அமைக்கப்பட்ட ஒரு கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
குடைவரை கோவில் என்றாலே பல்லவர்களை தான் கூறுவார்கள். ஆனால் பல்லவர்களுக்கு முன்பே குடைவரை கோவில் அமைத்த பெருமை பாண்டியர்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் அமைந்து உள்ளது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு 2 அல்லது 5 நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோவில் என்பதை அறியலாம். முற்கால பாண்டியர்கள் தான் இந்த குடைவரை கோவிைல அமைத்து உள்ளனர். 4-ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் அருகே பெரிய தெப்பக்குளம் உள்ளது. சமீபத்தில் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தெப்பக்குளம் நீர் நிரம்பி காணப்படுகிறது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதோடு நீர்நிரம்பிய தெப்பக்குளத்தின் அருகே நின்று கோவில் கோபுரத்துடன் புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்குடியில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி:
காரைக்குடி ஐந்து விளக்கு அருகே தி.மு.க. மகளிர் அணி சார்பில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு காரணமான மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான கே. ஆர். பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் காரைக்குடி நகர மன்ற முன்னாள் தலைவர் முத்துத்துரை, நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.ஆனந்த், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, தொழிலாளர் முன்னேற்ற சங்க கவுரவத் தலைவர் வைரவன், மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி கண்ணாத்தாள், தெய்வானை, இளமாறன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அருகே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை இந்திரா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் இல்லை.
இதனால் சமீபத்தில் பெய்த மழையால் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் கழிவுநீருடன் கலந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நின்றது.
இதை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிவகங்கை இளையான்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்,சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் மறியலை கைவிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 9 இடங்களில் அம்மா மருத்துவ மினி கிளினிக்குகளை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
சிவகங்கை:
கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் உடனடியாக மருத்துவ வசதி பெறுவதற்காக 2 ஆயிரம் மருத்துவ மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர் சமீபத்தில் மருத்துவ கிளினிக்கை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 9 இடங்களில் அம்மா மருத்துவ மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதன் தொடக்கவிழா வெற்றியூர், மதகுபட்டி, கட்டாணிபட்டி, மாத்தூர், பச்சேரி, ராஜகம்பீரம், பிரமனூர், குமாரக்குறிச்சி, சிலுக்கபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ்யசோதாமணி வரவேற்று பேசினார்.
விழாவில் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிய கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் தான் ஏழை எளிய விவசாய மக்களுக்கு பயன்படும் வகையில் பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுகிறார். நமது மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டதால் அனைத்தும் நிரம்பியுள்ளன..இதனால் விவசாயம் செழித்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தொகையை 1000-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் உடனடி மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக இந்த மினிகிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. நமது மாவட்டத்தில் 36 இடங்களில் மினிகிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளது.மக்களின் தேவைகள் நிறைவேற்ற நாங்கள் எப்போதும் ஒதுங்கி நின்றதில்லை.தற்போது கூட ரூ.1,800 கோடியில் குடிநீர்திட்டம் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் 90 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் மணிபாஸ்கரன், துணைத்தலைவர் சரஸ்வதி, ஆவின் சேர்மன் அசோகன், பாம்கோ சேர்மன் ஏ.வி.நாகராஜன், இந்து சமய அறநிலையதுறை தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியா்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.