என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சிவகங்கை அருகே பொதுமக்கள் சாலை மறியல்
சிவகங்கை அருகே சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை இந்திரா நகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான சாலை வசதி மற்றும் கழிவுநீர் வெளியேற போதுமான வசதிகள் இல்லை.
இதனால் சமீபத்தில் பெய்த மழையால் மழைநீர் வெளியேற வழி இல்லாததால் கழிவுநீருடன் கலந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நின்றது.
இதை அகற்ற நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று சிவகங்கை இளையான்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்,சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் மறியலை கைவிட்டனர்.
Next Story






