என் மலர்
செய்திகள்

சிவகங்கை கலெக்டர்
இளையான்குடி பகுதியில் மிளகாய் சாகுபடி நிலத்தில் கலெக்டர் ஆய்வு
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் மிளகாய் சாகுபடி நிலத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள முனைவென்றி கிராமத்தில் தற்போது பெய்த கனமழையால் மிளகாய் செடிகள் சேதமடைந்து உள்ளது. இது குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மிளகாய் சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விவசாயிகள் கலெக்டரிடம், மழையால் மிளகாய் செடிகள் அழுகி சேதம் அடைந்து உள்ளன. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பித்த பின் அரசின் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் கலெக்டர் உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, வேளாண் துறை இயக்குனர் தனபாலன், உதவி இயக்குனர்கள ்சக்திவேல், தர்மர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story






