என் மலர்tooltip icon

    சிவகங்கை

    பேத்திகளுக்கு மது கொடுத்து தாத்தா மற்றும் தொழில் அதிபர் பலாத்காரம் செய்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 13 மற்றும் 12 வயது நிரம்பிய சகோதரிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. அவர்களின் தாத்தாவே சிலருடன் சேர்ந்து இந்த கொடுமையை செய்திருப்பதாக புகார் வந்தது.

    இதன் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கணவரை விபத்தில் பறிகொடுத்த பெண் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார்.

    இதனால் சகோதரிகளான 2 சிறுமிகளும் தாத்தா வீட்டிலேயே தங்கி இருந்தனர். அப்போது தான் அவர்கள் தாத்தாவால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.

    அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சுதேஷ், நவீன் ஆகியோரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த செயலுக்கு தொழிலதிபர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த தெரசாள் புனிதா (வயது 22) என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. ரவிக்குமாரும், சிறுமிகளின் தாத்தாவும் சேர்ந்து 2 சிறுமிகளுக்கும் மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    போலீசார் விசாரணை

    விசாரணையில் வெளியான தகவலின் அடிப்படையில் சிறுமிகளின் தாத்தா, தெரசாள் புனிதா, நவீன், மற்றும் சுதேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொழிலதிபர் ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான சிறுமிகளின் தாத்தா முதுகுளத்தூர் சிறையிலும், தெரசாள் புனிதா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார்.

    சிங்கம்புணரி அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியை சேர்ந்தவர் ரவி என்ற பழனியாண்டி (வயது 52). பெயிண்டர். இவர் நேற்று காலை 7 மணி அளவில் அரசினம்பட்டி அருகே ஒரு புளியமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக பழனியாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இறந்த பழனியாண்டிக்கு சீதா என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இது குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
    காரைக்குடி:

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள வேண்டும் என்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.

    ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினார்கள். கொரோனா 2-வது அலை தீவிரத்தால் தடுப்பூசி போட்டு கொள்வது தான் உயிருக்கு பாதுகாப்பு என அறிந்ததும் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.

    காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தடுப்பூசி போட்டு கொள்ள ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஓட்டு போடுவதற்காக காத்து நின்ற போல அணிவகுத்து நின்றனர்.

    தடுப்பூசி போட்டு கொள்ள வந்த அனைவரும் முககவசம் அணிந்திருந்த போதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாதது வேதனைக்குரியது. இருப்பினும் தங்கள் ஆதார் கார்டை காண்பித்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,

    தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. எனினும் சமூக இடைவெளியை பின்பற்றாததால் மேலும் கொரோனா ெதாற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற சிறப்பு முகாம்கள் நடத்தும் போது தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி போட வரும் ஆண்கள், பெண்கள் சமூக இடைவெளியுடன் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் பெருந்தொற்றில் இருந்து மீள முடியும் என்றனர்.

    திருப்புவனம் வர்த்தகர்கள் சங்கமும், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடத்திய சிறப்பு முகாமில் 387 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் திருப்புவனம் வர்த்தகர்கள் சங்க தலைவர் சாதிக் பாட்ஷா, செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சிராஜுதீன், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 102 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஒன்றிய சேர்மன் முனியாண்டி, வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
    சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மின்கம்பம், தென்னை மரம் சாய்ந்தன.
     சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி பகுதியில் நேற்று மாலை வானம் கருமேகக்கூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சிங்கம்புணரியை ஒட்டியுள்ள பிரான்மலை, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாழ்வான இடங்களில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் தென்னை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. சிங்கம்புணரி மாதவன் நகரில் தென்னை மரம் சாய்ந்து அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது. நல்லவேளை வீட்டின் மீது மரம் விழாததால் அங்கு வசித்து வருபவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சிங்கம்புணரி யூனியன் பஸ் நிறுத்தம் அருகே தென்னை மரம் விழுந்ததில் மின்கம்பமும் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மழை நின்ற பிறகு மின்வாரியத்துறையினர் சாய்ந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, பிரான்பட்டி, குன்னத்தூர், தர்மபட்டி ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகலில் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், இரவில் பெய்த மழையால் அப்பகுதி குளிர்ந்து காணப்பட்டது.

    காரைக்குடி அருகே வீடு புகுந்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி புறநகர் முத்துநகர் பகுதியில் வசிப்பவர் பழனியப்பன். இவர் தனது மகள் திருமணத்தையொட்டி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான வேப்பங்குளம் சென்றுவிட்டார். ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.81 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    சிவகங்கை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதுடன் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்திலும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 96ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 95 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் தற்போது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 722 ஆக உள்ளது.

    கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கையை மாற்ற ஒத்துழைத்திட வேண்டும் என்றும் சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
    திருப்புவனம்:

    பண்டைய கால வரலாற்றில் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறது. 

    தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் கீழடியில் நேற்று நடைபெற்ற அகழாய்வு பணியின் போது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் 3 பச்சை நிறத்திலும், ஒன்று சிவப்பு நிறத்திலும் உள்ளன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் கூடுதலாக பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 820 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது .

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 820 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 165 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    காரைக்குடி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்(வயது 65). இவர் காந்திதிடல் அருகே கடை வைத்து சலவை தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதை குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்து, வீட்டின் மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    இளையான்குடி:

    கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இளையான்குடியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை யாராவது மீறுகிறார்களா? என கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் தேவையின்றி ஊர் சுற்றியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சிங்கம்புணரி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியை சேர்ந்த சவுகத் அலி மகன் மைதீன் (வயது 32). தொழிலாளி. இவரது மனைவி ஜெனிபர் பானு. கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர்பானு அவரை பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் மைதீன் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கடந்த 10-ந்தேதி எலிபேஸ்ட்(விஷம்) எடுத்து சாப்பிட்டு விட்டார். இதில் மயங்கி விழுந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.
    தேவகோட்டை:

    தேவகோட்டை நகரில் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன.இதனை ஆய்வின்போது கண்டுபிடித்த தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சென்று பூட்டி சீல் வைத்தனர்.
    ×