என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மது கொடுத்து 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- தலைமறைவான தொழில் அதிபரை போலீஸ் தேடுகிறது

    பேத்திகளுக்கு மது கொடுத்து தாத்தா மற்றும் தொழில் அதிபர் பலாத்காரம் செய்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 13 மற்றும் 12 வயது நிரம்பிய சகோதரிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. அவர்களின் தாத்தாவே சிலருடன் சேர்ந்து இந்த கொடுமையை செய்திருப்பதாக புகார் வந்தது.

    இதன் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கணவரை விபத்தில் பறிகொடுத்த பெண் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார்.

    இதனால் சகோதரிகளான 2 சிறுமிகளும் தாத்தா வீட்டிலேயே தங்கி இருந்தனர். அப்போது தான் அவர்கள் தாத்தாவால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.

    அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சுதேஷ், நவீன் ஆகியோரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த செயலுக்கு தொழிலதிபர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த தெரசாள் புனிதா (வயது 22) என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. ரவிக்குமாரும், சிறுமிகளின் தாத்தாவும் சேர்ந்து 2 சிறுமிகளுக்கும் மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    போலீசார் விசாரணை

    விசாரணையில் வெளியான தகவலின் அடிப்படையில் சிறுமிகளின் தாத்தா, தெரசாள் புனிதா, நவீன், மற்றும் சுதேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொழிலதிபர் ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான சிறுமிகளின் தாத்தா முதுகுளத்தூர் சிறையிலும், தெரசாள் புனிதா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×