என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.
    • இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் மலை, ஜருகு மலை, சூரிய மலை கோதுமலை, பாலமலை, நகர மலை, கஞ்சமலை என இயற்கை எழில் கொஞ்சம் மலைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.

    சேலம் வனக்கோட்ட பகுதிகள் காவேரி, சுவேதா நிதி, சரபங்காநதி, வெள்ளாறு, திருமணிமுத்தாறு, காட்டாறு, கோமுகி நதி என சிறு சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருக்கின்றன.

    சேலம் மாவட்டத்தில் காப்புக்காடுகள் 67532.122 ெஹக்டர் பரப்பளவும் காப்பு நிலங்கள் 3031.925 ஹெக்டர் பரப்பளவு மற்றும் வகைப்படுத்தப்படாத நிலங்கள் 388.015 ஹெக்டர் என ஆக மொத்தம் 70952.062 ஹெக்டர் பரப்பளவில் வளங்கள் உள்ளன.

    இந்த காப்புக்காடுகளில் யானை, காட்டுமாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான மன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் வாழ்விடமாக கொண்டு வசித்து வருகின்றன.

    சேலம் வனக்கோட்டம் 6 வனங்களின் ஆற்று சரகமாக பிரிக்கப்பட்டு முறையை சேர்வராயன் தெற்கு வன சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ் பேட்டை, மேட்டூர், ஏற்காடு, மற்றும் வாழப்பாடி தமிழ்நாடு வனத்துறை மூலமாக ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 29-ந்தேதி நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ப விருப்பமுள்ள தன்னார்வலர்கள் https:forms.gle/m85jUz9kavYKvGrD8 என்ற லிங்க் முகவரியில் நாளை(புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் பதிவு செய்யுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    3-ந் தேதி பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்தான முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து வருகிற 4,5-ந் தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.
    • இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கேட் அருகில் சுமார் 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்துபோன மூதாட்டி , அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே, போலீசார் மூதாட்டி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டபம் டிரஸ்ட் மற்றும் தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் சிவானந்தபுரி வாரியார் கலந்து கொண்டு கந்தபுராண சொற்பொழிவு ஆற்றினார்.

    சேலம்:

    ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் மாதாந்திர கிருத்திகை சொற்பொழிவு ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டபம் டிரஸ்ட் மற்றும் தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் சிவானந்தபுரி வாரியார் கலந்து கொண்டு கந்தபுராண சொற்பொழிவு ஆற்றினார்.

    தெய்வீக தமிழ்ச்சங்க தலைவர் புலவர் ராமன் தலைமை வகித்தார். தெய்வீக பேரவை தலைவர் மற்றும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சிவ அசோக், ஸ்ரீ சனாதன தர்ம வித்யாபீடம் செயலாளர் டாக்டர் என். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வள்ளிமலை ஆதீன குரு முதல்வர் குரு மகராஜூக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. செம்மொழி விஜயன் வரவேற்றார். தெய்வீக தமிழ்ச்சங்க நிறுவனர் செம்முனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தெய்வீக தமிழ் சங்க பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆன்மீக மையம் ஜவகர், முத்து சரவணன், ஜெமினி கணேசன், ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் அலுவலர் நேரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 1165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 992 கன அடியாக சரிந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் காவிரியில் மிதமான அளவு தண்ணீர் வருகிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 1165 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 992 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து வினாடிக்கு1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103 .58 அடியாக இருந்தது. அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கிறார்கள்.

    • பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார்.
    • பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார்.

    சேலம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). பிச்சைக்காரரான இவர், கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு சலவை தொழில் செய்து கொண்டே யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அவரது மனைவி சரஸ்வதி 24 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். தனது 3 பிள்ளைகளை கரை சேர்த்த பூல்பாண்டி, முழு நேர பிச்சைக்காரர் ஆனார். மும்பையில் மரக்கன்று நடுவது, பிச்சை பெற்ற பணத்தில் பள்ளிகளுக்கு உதவுவது போன்ற சமூக தொண்டாற்றி வந்தார். மேலும் தான் பிச்சை பெற்ற பணத்தை கொரோனா நிதி, இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் தான் பிச்சை பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். பிச்சை எடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை, நான் முழுவதும் வைத்துக் கொள்வதில்லை. ஓரளவு பணம் சேர்ந்ததும் அதை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவேன். மேலும் பள்ளிகளுக்கும் நன்கொடை வழங்கி வருகிறேன். தற்போது எனக்காகவும், சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், என்பதற்காகவும் பிச்சை பெற்று அதை நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறேன் என்றார்.

    பின்னர் தான் கொண்டு வந்த பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படி சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் வழங்கினார்.

    • செலவடையில் நேற்று முன்தினம் டாரஸ் லாரி ஒன்று வேகமாக அடுத்தடுத்து 3 மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • காட்டுராஜா (31) என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டியதால் தான் இந்த விபத்து நேரிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த செலவடையில் நேற்று முன்தினம் டாரஸ் லாரி ஒன்று வேகமாக அடுத்தடுத்து 3 மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25), இவருடைய சகோதரி மகன் சந்ேதாஷ் (15), ஜலகண்டாபுரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி சாந்தி (35) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் பாலகிருஷ்ணனின் 1½ வயது குழந்தை யுவஸ்ரீ மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தது. மேலும் படுகாயம் அடைந்த வசந்தகுமார் (38), எடப்பாடி பக்கநாடு கிராமம் ஆணைப்பள்ளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி இந்துமதி (23) மற்றும் அவர்களது குழந்தை இனியா (2) ஆகிய 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் டாரஸ் லாரியை ஓட்டிய அரியலூரை சேர்ந்த காட்டுராஜா (31) என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டியதால் தான் இந்த விபத்து நேரிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து ஜலகண்டாபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் மீது அதிவேகமாக அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், உயிரிழப்பு ஏற்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விசாரணை முடிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சேலம் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவித்தனர்.
    • பெரியார் பாலத்தில் சென்றபோது, அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோரது உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர்.

    சேலம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவ ளவனை அவதூறாக பேசிய தாக, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமி ஆகியோரை கைது செய்யக்கோரி, சேலம் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவித்தனர்.

    அதன்படி, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் திரண்டனர். அவர்களை துணை கமிஷனர் மாடசாமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும், போலீ சாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள், அண்ணா பூங்கா அருகில் இருந்து பேரணியாக சென்றனர். பெரியார் பாலத்தில் சென்றபோது, அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோரது உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், தடுத்து நிறுத்தி உருவ பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மண்டல செயலாளர் நவரசன், இமயவர்மன், பொருளாளர் காஜா மைதீன், பாவேந்தன், வேலுநாயக்கர், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் இன்று நடைபெற்றது.
    • மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 214 மனுக்கள் வரப்பெற்றன.

    மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி களிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று மாற்றுத்திறனாளிகளி டமிருந்து 13 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,357 மதிப்பிலான தையல் எந்திரத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார். இதில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீட்டில் பதிவாகியுள்ள தடயங்களை தடையவியில் நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர்.
    • கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி:

    எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட சின்னமணலி, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேலு மகன் சங்கரநாராயணன் (வயது 33). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.

    அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்த அவர், தொடர்ந்து அங்கிருந்து கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் சிலர் நேற்று இரவு சங்கரநாராயணனின் வீட்டின் பூட்டை உடைத்து அங்கு பீரோவில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர்.

    இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சங்கரநாராயணனுக்கு தகவல் தெரிவித்து வீட்டில் பார்வையிட்டனர். பீரோவில் வைத்து சென்று இருந்த 11 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி செயின் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.

    மேலும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்த வீட்டில் பதிவாகியுள்ள தடயங்களை தடையவியில் நிபுணர்கள் சேகரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றவரின் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நேற்று அணையின் நீர்மட்டம் 103.60 அடியாக இருந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கனஅடியாக நீடிக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 993 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 1,155 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று அணையின் நீர்மட்டம் 103.60 அடியாக இருந்தது. இன்றும் அதே நிலையில் நீடிக்கிறது.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2020-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
    • நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர் என்று ஜெயில் சூப்பிரண்டு கூறினார்.

    சேலம்:

    குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி நள்ளிரவில் கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக கொலையாளிகள் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(32), கோட்டாறை சேர்ந்த தவுபிக் (32) ஆகியோரை கர்நாடகாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை கொலை செய்தது போல் பல்வேறு இடங்களில் சதிச்செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதனால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் உயர் பாதுகாப்பு அறையில், தனித்தனியே அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள், சிறையில் கீழ் தள அறையில் அடைக்க வேண்டும், நடைபயிற்சி செல்ல அனுமதிப்பதோடு சக கைதிகளுடன் பேசி பழக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக்கூறி நேற்று மதியம் முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதை அறிந்த சிறை அதிகாரிகள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில், இருவரும் முறையாக மனு அளிக்காமல் சிறை நிர்வாகத்தை மிரட்டி பார்க்கின்றனர். நொறுக்கு தீனியை சாப்பிட்டுவிட்டு, உண்ணாவிரதம் இருப்பதாக பொய் சொல்கின்றனர், என்றார்.

    • தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
    • ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

    சேலம்:

    இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

    அதற்கான கட்டணத்தை அரசு அந்த பள்ளிகளுக்கு செலுத்துகிறது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு அடுத்த மாதம் (மார்ச்) 20-ந்தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு இதற்கான முன்னேற்பாடுகளை செய்துவரும் நிலையில், தனியார் பள்ளிகள் இந்த திட்டத்தை தொடருவது பற்றி பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை.

    இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித் துறை தயாராகிவருவது அதிர்ச்சியளிக்கிறது. எனவே நிலுவை கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசு விடுவிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், 25 சதவீத இலவச சேர்க்கையை தனியார் பள்ளிகளில் தொடருவது பற்றி பரிசீலனை செய்யவேண்டிய நிலை வரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    ×