என் மலர்
நீங்கள் தேடியது "Rally-picketing in defiance of the ban"
- சேலம் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவித்தனர்.
- பெரியார் பாலத்தில் சென்றபோது, அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோரது உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர்.
சேலம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவ ளவனை அவதூறாக பேசிய தாக, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தடா பெரியசாமி ஆகியோரை கைது செய்யக்கோரி, சேலம் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேரணி மற்றும் மறியல் போராட்டம் அறிவித்தனர்.
அதன்படி, இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சேலம் அண்ணா பூங்கா அருகில் திரண்டனர். அவர்களை துணை கமிஷனர் மாடசாமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும், போலீ சாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள், அண்ணா பூங்கா அருகில் இருந்து பேரணியாக சென்றனர். பெரியார் பாலத்தில் சென்றபோது, அமித்ஷா மற்றும் அண்ணாமலை ஆகியோரது உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்தனர். ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், தடுத்து நிறுத்தி உருவ பொம்மைகளை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் சேலம் கலெக்டர் அலுவலக ரவுண்டானா அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மண்டல செயலாளர் நவரசன், இமயவர்மன், பொருளாளர் காஜா மைதீன், பாவேந்தன், வேலுநாயக்கர், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






