என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயனாளிக்கு தையல் எந்திரத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கியபோது எடுத்த படம்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்214 மனுக்கள் குவிந்தன
- வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் இன்று நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 214 மனுக்கள் வரப்பெற்றன.
மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி களிடம் பெறப்படும் மனுக்களின் மீது உரிய தீர்வு காணப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று மாற்றுத்திறனாளிகளி டமிருந்து 13 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,357 மதிப்பிலான தையல் எந்திரத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார். இதில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






