என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old woman dies மூதாட்டி சாவு"

    • உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் மேடு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி லட்சுமி (வயது 60).

    இவர் கடந்த 28-ம் தேதி உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் மேடு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த லட்சுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருமாயி (வயது 82). கூலிதொழிலாளி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
    • தீராத தலைவலி இருந்து வந்தது. பல்வேறு மருத்துவமனை களுக்கு சென்று சிகிச்சை பெற்றும், தலைவலி சரியாக வில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கருமகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாயி (வயது 82). கூலிதொழிலாளி. இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனியாக வசித்து வந்த பெருமாயிக்கு தீராத தலைவலி இருந்து வந்தது.

    பல்வேறு மருத்துவமனை களுக்கு சென்று சிகிச்சை பெற்றும், தலைவலி சரியாகவில்லை. இதனால் விரத்தியில் இருந்த பெருமாயி, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து உள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

    அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி பெருமாயி உயிரிழந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.
    • இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கேட் அருகில் சுமார் 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இறந்துபோன மூதாட்டி , அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே, போலீசார் மூதாட்டி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
    • இதனால் மனமுடைந்த ஆராயம்மாள் வீட்டில் வைத்திருந்த பூச்சி கொல்லி விஷத்தை திடீரென குடித்தார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஆராயம்மாள் (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த ஆராயம்மாள் வீட்டில் வைத்திருந்த பூச்சி கொல்லி விஷத்தை திடீரென குடித்தார். இது பற்றி தெரிந்த கணவர் ஆறுமுகம், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆராயம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை வருகின்றனர். 

    ×