என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
    X

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

    • உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் மேடு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி லட்சுமி (வயது 60).

    இவர் கடந்த 28-ம் தேதி உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் மேடு என்ற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த லட்சுமியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×