என் மலர்
உள்ளூர் செய்திகள்

வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் சிவானந்தபுரி வாரியார் சொற்பொழிவு ஆற்றிய காட்சி.
ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில்மாதாந்திர கிருத்திகை சொற்பொழிவு
- ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டபம் டிரஸ்ட் மற்றும் தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் சிவானந்தபுரி வாரியார் கலந்து கொண்டு கந்தபுராண சொற்பொழிவு ஆற்றினார்.
சேலம்:
ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் மாதாந்திர கிருத்திகை சொற்பொழிவு ஸ்ரீ முத்துமலை முருகன் தியான மண்டபம் டிரஸ்ட் மற்றும் தெய்வீக தமிழ் சங்க அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வள்ளிமலை ஆதீனம் குரு மகராஜ் சிவானந்தபுரி வாரியார் கலந்து கொண்டு கந்தபுராண சொற்பொழிவு ஆற்றினார்.
தெய்வீக தமிழ்ச்சங்க தலைவர் புலவர் ராமன் தலைமை வகித்தார். தெய்வீக பேரவை தலைவர் மற்றும் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சிவ அசோக், ஸ்ரீ சனாதன தர்ம வித்யாபீடம் செயலாளர் டாக்டர் என். சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் நிர்வாகத்தின் சார்பாக வள்ளிமலை ஆதீன குரு முதல்வர் குரு மகராஜூக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. செம்மொழி விஜயன் வரவேற்றார். தெய்வீக தமிழ்ச்சங்க நிறுவனர் செம்முனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தெய்வீக தமிழ் சங்க பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆன்மீக மையம் ஜவகர், முத்து சரவணன், ஜெமினி கணேசன், ஸ்ரீ முத்துமலை முருகன் கோவில் அலுவலர் நேரு மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






