search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வனக்கோட்டத்தில்  பறவைகள் கணக்கெடுப்பு பணி 5-ந்தேதி தொடக்கம்
    X

    சேலம் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி 5-ந்தேதி தொடக்கம்

    • சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.
    • இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சேலம் வனக்கோட்டம் மிகவும் பழமை வாய்ந்த கோட்டமாகும்.சேலம் வனக்கோட்டத்தில் சேர்வராயன் மலை, ஜருகு மலை, சூரிய மலை கோதுமலை, பாலமலை, நகர மலை, கஞ்சமலை என இயற்கை எழில் கொஞ்சம் மலைகள் மற்றும் குன்றுகள் காணப்படுகின்றன.

    சேலம் வனக்கோட்ட பகுதிகள் காவேரி, சுவேதா நிதி, சரபங்காநதி, வெள்ளாறு, திருமணிமுத்தாறு, காட்டாறு, கோமுகி நதி என சிறு சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருக்கின்றன.

    சேலம் மாவட்டத்தில் காப்புக்காடுகள் 67532.122 ெஹக்டர் பரப்பளவும் காப்பு நிலங்கள் 3031.925 ஹெக்டர் பரப்பளவு மற்றும் வகைப்படுத்தப்படாத நிலங்கள் 388.015 ஹெக்டர் என ஆக மொத்தம் 70952.062 ஹெக்டர் பரப்பளவில் வளங்கள் உள்ளன.

    இந்த காப்புக்காடுகளில் யானை, காட்டுமாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான மன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் வாழ்விடமாக கொண்டு வசித்து வருகின்றன.

    சேலம் வனக்கோட்டம் 6 வனங்களின் ஆற்று சரகமாக பிரிக்கப்பட்டு முறையை சேர்வராயன் தெற்கு வன சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ் பேட்டை, மேட்டூர், ஏற்காடு, மற்றும் வாழப்பாடி தமிழ்நாடு வனத்துறை மூலமாக ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 29-ந்தேதி நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து வருகிற 5-ந்தேதி மாநில அளவில் நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் குறித்த இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ப விருப்பமுள்ள தன்னார்வலர்கள் https:forms.gle/m85jUz9kavYKvGrD8 என்ற லிங்க் முகவரியில் நாளை(புதன்கிழமை) மாலை 6 மணிக்குள் பதிவு செய்யுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    3-ந் தேதி பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்தான முன்னேற்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து வருகிற 4,5-ந் தேதிகளில் நிலப்பரப்புகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×