என் மலர்tooltip icon

    சேலம்

    • நேற்று இரவு கருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாத காப்பட்டிக்கு புறப்பட்டார்.
    • சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 50). இவர் நேற்று இரவு கருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாத காப்பட்டிக்கு புறப்பட்டார்.

    சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் சுந்தர்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் சுந்தர்ராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.
    • இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும்.

    ேசலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-

    டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

    இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 11 1/2 வயது நிரம்பி யவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.01.2011-க்கு முன்ன தாகவும் 01.07.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

    மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை , பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427-2902903 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வசிஷ்டநதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
    • பேளூரை கடந்த தும், 13-வது கி.மீ. தூரத்தில் ஏ.குமாரபாளையம் அணைக்கட்டு அருகே, பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து 22 கி.மீ., தூரம் கடந்து கரியக்கோயில் ஆறு இணைகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி அபிநவம்-வைத்தியகவுண்டன் புதூர் சாலையை, சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வசிஷ்டநதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

    வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, புழுதிக்குட்டையில் இருந்து குறிச்சி, கோணஞ்செட்டியூர் வழியாக பேளூரை கடந்த தும், 13-வது கி.மீ. தூரத்தில் ஏ.குமாரபாளையம் அணைக்கட்டு அருகே, பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து 22 கி.மீ., தூரம் கடந்து கரியக்கோயில் ஆறு இணைகிறது.

    வசிஷ்டநதி என்ற பெயரிலேயே படையாச்சியூர், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூர், தலைவாசல் வழியாக பல நீரோடைகளை இணைத்துக் கொண்டு, சேலம் மாவட்ட எல்லைக்குள் 85 கி.மீ., தூரம் பயணிக்கும் வசிஷ்ட நதி, கொல்லிமலையில் உற்பத்தியாகி தம்மம்பட்டி, கெங்கவல்லி வழியாக வழிந்தோடி, சுவேதா நதியுடன் இணைந்து, வெள்ளாறு என்ற பெயரில் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. 208 கி.மீ., தூரத்தை கடந்து சென்று பல்வேறு கிளையாறுக ளுடன் இணைந்து, இறுதி யாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வசிஷ்டநதி வங்கக்கடலில் கலக்கிறது.

    புழுதிக்குட்டை ஆணை மடுவு அணை, பாப்ப நாயக்கன்பட்டி கரியக்கோ யில் அணை நிரம்பும் போது உபநீர் திறக்கப்படுவதாலும், அணையில் இருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, வசிஷ்டநதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள வைத்தியகவுண்டன் புதூரில் இருந்து கிழக்கு கரையிலுள்ள ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்திற்கு ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால், வைத்திய கவுண்டன்புதுார், ஏத்தாப்பூர் அபிநவம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், ஏத்தாப்பூர் அல்லது பெரியகிருஷ்ணாபுரம் வழியாக சென்று சேலம்–-சென்னை சாலையை அடைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, ஏத்தாப்பூர், அவிநவம்–, வைத்தியக வுண்டன்புதூர் சாலையில் வசிஷ்டநதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

    • பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான்.
    • எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன் பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவனை, உடனடியாக மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று சிறுவன் பேரரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜா (வயது 40). இவர் வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை அருகே தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார்.
    • வழக்கம் போல் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்திய இவர், கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை அருகே தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில். வழக்கம் போல் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்திய இவர், கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.

    இதனால் பதறிப்போன இவர், பல இடங்களில் தேடியும் ஆட்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை பார்த்ததில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோவை கடத்திச் சென்ற மர்மநபர் குறித்து வாழப்பாடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனிடையே மர்ம நபர், அந்த ஆட்டோவை உடையாப்பட்டி சாய்பாபா கோவில் அருகே உள்ள இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று ஆட்டோவை மீட்டனர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மேட்டூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குறுவட்ட அளவர் (சர்வேயர்) அலுவலகம் இயங்கி வருகிறது.
    • சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குறுவட்ட அளவர் (சர்வேயர்) அலுவலகம் இயங்கி வருகிறது. இதையடுத்து சர்வேயருக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகம், மேட்டூர் காவலர் குடியிருப்பு எதிரே உள்ள இடத்தில் ரூ.15.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டது.

    சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை, அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் திறந்து வைத்ததுடன் சரி, இன்று வரை இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த அலுவலகத்தை யாரும் திறக்கவே இல்லை. அரசு நிதி ரூ.15 லட்சத்திற்கு மேல் செலவழித்து கட்டப்பட்ட, இந்த புதிய கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகி சேதம் அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொது மக்களிடம் கேட்டபோது, சர்வேயர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம், மேட்டூரில் இருக்கிறதா என்றால், இருக்கிறது ஆனால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்கின்றனர். 

    • தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் பொது ஏலம் விடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு அதிகபடியான ஏல தொகையாக ரூ. 1.25 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் பொது ஏலம் விடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அதிகபடியான ஏல தொகையாக ரூ. 1.25 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது.

    இதனால் ஒப்பந்ததா ரர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில் பலமுறை வியா பாரிகள் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் குத்தகை காலம் நிறைவடைத்து விட்டதால் கடந்த 10 நாட்களாக நகராட்சி நிர்வாகம் சுங்க கட்டணத்தை வசூலித்து வந்தது.

    அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலித்து வந்ததால் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தை செலுத்தி மிகுந்த மகிழ்ச்சி யுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று 2023-2024-ம் ஆண்டிற்கான ஏலம் நடைபெறுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று காலை மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நகராட்சி ஆணையாளரிடம் ஒரு மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் கடந்த ஆண்டில் ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் தங்களி டம் அதிக கட்டணம் வசூல் செய்து கொண்டு முறையான ரசீது வழங்காமல் வந்தனர். தற்போது மீண்டும் ஏலம் எடுக்கும் குத்தகை தாரர்கள் அரசு நிர்ணயம் செய்த பெரிய கடைகளுக்கு 35 ரூபாயும். சிறிய கடைகளுக்கு 15 ரூபாயும்.

    பூக்கூடை ஒன்றுக்கு 5 ரூபாயும். விவசாயிகளிடம் சிப்பம் ஒன்று 5 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்க வும் அந்த தொகைக்கு உரிய ரசீது வழங்கவும் நகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    நேற்று மார்க்கெட் குத்தகை ஏலம் நடைபெற இருந்த நிலையில் வியா பாரிகள் திரண்டு வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • சேலம் போக்சோ நீதிமன்றம் செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நெருங்கி பழகியதில் கர்ப்பமானார்.

    இதனால் சிகிச்சைக்காக வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கடந்த 6-ந்தேதி சிறுமி சென்றார். சிறுமியின் வயிற்றில் 7 மாதத்திற்கு மேல் கரு வளர்ந்து விட்டதால், அந்த குறை மாத குழந்தையை, டாக்டர் செல்வாம்பாள் பிரசவிக்க செய்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதே சமயம் குழந்தையை பிரசவித்த பிறகு சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மறுநாள் (7-ந்தேதி) அதிகாலையில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனிடையே சிறுமிக்கு பிறந்த சிசுவை ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி ஆட்கள் இல்லாத பகுதியில் வீசப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ குழுவினர் சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் வளர்மதி, வாழப்பாடி அரசு தலைமை மருத்துவர் ஜெயசெல்வி, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், டி.எஸ்.பி. ஹரிசங்கரி உள்ளிட்டோர் டாக்டர் செல்வாம்பாளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து, திருமணமாகாத சிறுமிக்கு பிரசவ சிகிச்சை அளித்த டாக்டர் செல்வம்பாள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாழப்பாடி அரசு தலைமை டாக்டர் ஜெயசெல்வி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான செல்வாம்பாள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதுகுறித்து தகவல் தெரியவந்ததால் சோர்ந்து காணப்பட்ட செல்வாம்பாள், இரு தினங்களுக்கு முன் வாழப்பாடியிலுள்ள அவரது மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சேலம் போக்சோ நீதிமன்றம், செல்வாம்பாளை கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்க நேற்று உத்தரவிட்டது. இதனால் போலீசார், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் செல்வாம்பாளை நேற்றிரவு கைது செய்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதுபோல் சிறுமி கர்ப்பத்துக்கு காரணமான வாலிபர் மீதும் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அனுபவ அடிப்படையில், ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
    • தர்மபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த முருகேசன் (62), மல்லிகுந்தம் முனுசாமி (63) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் சரகத்தில் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல், ஏதாவது ஒரு டாக்டரிடம் உதவியாளராக பணிபுரிந்து, அந்த அனுபவ அடிப்படையில், ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினார்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வி.என்.பாளையம் பன்னீர்செல்வம் (வயது 63), வைகுந்தம் தேவராஜன் (67), ஓமலூர் கச்சேரி தெரு மணிகண்டன் (38), சக்கரைசெட்டிப்பட்டி வாசுதேவன் (46), ஆர்.சி.செட்டிப்பட்டி ஆன்ட்ரோஸ் (40) ஆகிய 5 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் குருவிநாயன்பள்ளி பசவண்கோவில் நதீம் (25), திருப்பத்தூர் தாலுகா தொக்கியம் குண்டலமலையூர் கோவிந்தராஜ் (50), பர்கூர் ஜெகதேவ் ரோடு மிதுன்குமார் (27), பெரிய மோட்டூர் கோவிந்தன் கொட்டாய் குப்புராஜ் (48), பாகலூரில் பெங்களூருவை சேர்ந்த முகமது சபீ (70) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த முருகேசன் (62), மல்லிகுந்தம் முனுசாமி (63) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 1-ந் தேதி முதல் இன்று வரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • திருமணம் செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி செல்வகுமார் காலம் கடத்தி வந்தார்.
    • ஸ்வேதா செல்வகுமார் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் தெற்கு அம்மாபேட்டை, நாமமலை அடிவாரம் பகுயில் வசித்து வருபவர் அங்கப்பன். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 28).

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், குஞ்சிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்வேதா (25). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இதே நிறுவனத்தில் செல்வகுமாரும் பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளாடைவில் காதலாக மாறியது. செல்வகுமார் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி செல்வகுமார் காலம் கடத்தி வந்தார்.

    அதனால், நேற்று சேலம் வந்த ஸ்வேதா செல்வகுமார் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திருமணத்துக்கு சம்மதிக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என கூறினார்.

    இதனால் அம்மாப்பேட்டை போலீசார், அங்கு வந்து ஸ்வேதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை அடுத்து, ஸ்வேதா தர்ணாவை கைவிட்டார்.

    • மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • நேற்று 102.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.70 அடியாக சரிந்தது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததுள்ளது.

    நேற்று விநாடிக்கு 1,873 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,723 கனஅடியாக சரிந்தது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நேற்று 102.71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை நிலவரப்படி 102.70 அடியாக சரிந்தது.

    • பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான்காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பின், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலத்தை அடுத்துள்ள பனமரத்துப்பட்டி நல்லியம்புதூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அறுமுகம் (வயது 35). இவருக்கு இளம்பிள்ளையை சேர்ந்த பிரியா (28) என்பவருடன் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகனும், 8 மாதத்தில் மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி, பிரியா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது பெற்றோர், மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, பனமரத்துப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில், சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி, இன்ஸ்பெக் டர் கலையரசி தலைமையிலான போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

    திருமணமான 7 ஆண்டிற்குள் அவர் இறந்திருப்பதால், சேலம் ஆர்.டி.ஓ விஷ்ணுவர்த்தினியும் விசாரணை நடத்தினார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, பிரியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில், பிரியாவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஆறுமுகம் தான்காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கூலி வேலை பார்த்து வரும் ஆறுமுகம், தனது அண்ணியுடன் தகாத உறவை வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அவரது அண்ணியுடன் தனிமையில் இருப்பதை பிரியா நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்து கணவனிடம் தட்டிக்கேட்ட போது, பிரியாவிடம் தகராறு செய்து விட்டு ஆறுமுகம் வெளியேச் சென்று விட்டார். பிறகு தனது கணவன் அண்ணியுடன் தகாத உறவு வைத்திருப்பதை எண்ணி வேதனையடைந்த பிரியா, வீட்டில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஆறுமுகம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இளம்பெண் தற்கொலை வழக்கில் 2 மாதத்திற்கு பின், தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×