என் மலர்tooltip icon

    சேலம்

    • வெங்கடேசன் (வயது 48) தச்சு தொழிலாளி. வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
    • வீட்டை திறந்து பார்த்தபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சேலம்:

    சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48) தச்சு தொழிலாளி. வெங்கடேசன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று வெங்கடேசன் பழனி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டை திறந்து பார்த்தபோது, பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 1 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து வெங்கடேசன் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தசரதன் (வயது 48). பெயிண்ட் வியாபாரி. இவர் 3 ரோட்டில் பெயிண்ட் மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தார்.
    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 48). பெயிண்ட் வியாபாரி. இவர் 3 ரோட்டில் பெயிண்ட் மொத்தமாக வாங்கி கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு 10 மணி அளவில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் தசரதன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தசரதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான தசரதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ரஞ்சிதம் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது.
    • சேலத்தில், நேற்று முன்தினம் 100.1 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 101.9 டிகிரியாக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில்

    கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 100.1 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 101.9 டிகிரியாக உயர்ந்துள்ளது.

    இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு 3 டிகிரி அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மதிய நேரத்தில் வெப்ப சலனத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம் பெண்கள்முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக் கொண்டும் கைகளில் 'கிளவுஸ்' மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர்.

    நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரண மாக பகல் நேரங்களில் கடைவீதிகளில் மக்கள் கூட்ட மும் குறைவாகவே காணப் படுகிறது. உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறி சீக்கி ரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது.

    இதனால் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்பு கின்றனர். கொளுத்தும் வெயிலால் சேலம் மண்டலத்தில் நுங்கு, இளநீர், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், தர்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனையும் அதிகரித்துள்ளன. இரவு நேரங்களில் வீடுகளில் வெப்பம் சலனம் இருப்பதால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ஏப்ரல் 2-வது வாரத்தில் இயல்பை விட 3 டிகிரி வெயில் அதிகரிக்கும். அக்னி நட்சத்திர காலகட்டத்தில் சேலம் மண்டலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்றனர். இதேபோல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று 100.6 டிகிரியாக வெயில் பதிவானது.

    • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் காசநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 15 பேருக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர், காசநோய் மருத்துவர் கணபதி அறிவுறுத்தலின்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலையில் நடந்த முகாமில் சித்த மருத்துவர், பல் மருத்துவர், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட காசநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    • சக்தி (வயது 23), சித்தையன் (26) ஆகியோர், கடந்த 7-ந் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • தட்டிக்கேட்ட அந்தப் சிறுமியின் தந்தையை, சக்தி அரிவாளால் வெட்டியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை, கொளகூர் மலை கிராமத்தை சேர்ந்த சக்தி (வயது 23), சித்தையன் (26) ஆகியோர், கடந்த 7-ந் தேதி கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதை தட்டிக்கேட்ட அந்தப் சிறுமியின் தந்தையை, சக்தி அரிவாளால் வெட்டியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சிறுமியின் தாயார், இதுபற்றி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், சக்தி மற்றும் சித்தையன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சக்தியை கடந்த 8-ந் தேதி போலீசார் கைது செய்த நிலையில், மற்றொரு குற்றவாளியான சித்தையன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று சித்தையன் அவரது வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீசார், கரடியூர் கிராமம், பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த சித்தையனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் பகத்சிங் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது.
    • அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் பகத்சிங் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.

    மரம் வெட்டி சாய்ப்பு

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தியதில், மரத்தின் அருகில் வசித்து வரும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் மறைப்பதாக கூறி அந்த மரத்தை வெட்டியதும், மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் மரத்தை ெவட்டி சாய்த்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    புகாரை ஏற்க மறுப்பு

    ஆனால் போலீசார், புகாரை பெற்றுக் கொள்ள வில்லை. வருவாய் துறையினரை நாடுங்கள் என தெரிவித்து விட்டனர். அதே நேரத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த மரத்தை வெட்டியதை கண்டித்து உருக்கமான வரிகளுடன் பிளக்ஸ் பேனர் தயார் செய்து, மரம் வெட்டிய இடத்தில் வைத்துள்ளனர். அதில், வெட்டப்பட்ட மரம் பேசுவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

    அந்த பேனரில் நீர் தந்தேன், நிழல் தந்தேன், மகிழ்வித்தேன், காற்று தந்தேன், அனைத்து உயிருக்கும் நன்மை மட்டுமே செய்தேன், மனிதர்களே என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினார்கள், ஏன் நீங்கள் தடுக்கவில்லை என உருக்கமாக எழுதப் பட்டிருந்தது.

    இதனை அவ்வழியாக செல்லும் மக்கள் பார்த்து செல்கின்றனர். மரமும் ஒரு உயிர்தானே...அது கண்ணீர் வடிப்பது நியாயம்தானே...என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    • ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
    • சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் எடையபட்டியை சேர்ந்தவர் கணபதி(வயது24), பாப்பம்பாடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

    இருவரும் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தனி தனியாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்ட் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
    • நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், தற்காலிக சிகிச்சை மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. நோய் பாதிப்பு அறிகுறியுடன் வருபவர்களுக்கு மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப் படுகிறது.

    இதனிடையே மாவட்டம் முழுவதும் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சேலம் மாநகராட்சி பகுதிகளில் இருந்து மட்டும் 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சேலத்தில் 2 பேருக்கும், எடப்பாடியில் ஒருவருக்கும் என சேலம் சுகாதார மாவட்டத்தில் 3 பேருக்கும், பெத்தநாய்க்கன்பாளையம்,

    அயோத்தியாபட்டணம், கெங்கவல்லியில் தலா 2 பேருக்கும், தலைவாசலில் ஒருவர் என ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கும், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளிலும், மற்றவர்களுக்கு வீடுகளிலும் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மாஸ்க் போட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நேற்று கமிஷனர் அலுவலகத்தில் குற்றதடுப்பு கூட்டம் கமிஷனர் விஜயகுமாரி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

    நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் முககவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.
    • நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம் செட்டியார் காடு பகுதியை சேர்ந்த செந்தில், இவர் சொந்தமாக நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இந்த ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மள மள என பரவி அங்கிருந்த தேங்காய் நார் கழிவுகள் பற்றி எரிந்தது.

    இதுபற்றி ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது பற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1,723 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,562 கன அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2,000 கன அடியாக நீடித்த நிலையில், நேற்று காலை முதல் வினாடிக்கு 1,500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1,723 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,562 கன அடியாக சரிந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் 102.68 அடியாக சரிந்தது.

    • இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
    • ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது-

    வேளாண் அடுக்ககம் உருவாக்குவதன் மூலம் நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நிலஉடமை வாரியாக புவியியல் குறியீடு செய்தல் மற்றும் நில உடமை வாரியாக சாகுபடி பயிர் விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ் (குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம்) என்ற வலைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பேரிடர் மேலாண்மை, வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்க்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கூட்டுறவு துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்புத் துறை, வருவாய் துறை மற்றும் சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    மேலும், இந்த வலைதளம் மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். ஒற்றை சாளர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் நேரடியாக வலைத்தளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளும் விவசாயிகளின் அடிப்படை விவரங்கள் மற்றும் பயிர் விவரங்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயன்களை அளிக்க முடியும் திட்ட நிதி பலன்கள் நேரடி பண பரிமாற்றம் மூலம் அனுப்பப்படும்.

    மேலும், இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல் புகைப்படம் நகல் வங்கி கணக்கு புத்தக நகல் நிலப்பட்டா, ஆவண நகல் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் மேற்கொண்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர் / உதவி தோட்டக்கலை அலுவலரிடம் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.

    மலும், இந்த கிரெயின்ஸ் வலைதளத்தில் தங்களின் அடிப்படை விவரங்கள் பதிவு செய்யப்பட்டதை விவசாயிகள் உறுதிசெய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குடோன்களில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்டு மா, வாழை ஆகியவற்றை பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சேலம் சின்னகடை வீதியில் உள்ள 16 பழக்கடைகளில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களில் உள்ள பழக்கடைகள், குடோன்களில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்டு மா, வாழை ஆகியவற்றை பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் சின்னகடை வீதியில் உள்ள 16 பழக்கடைகளில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    அதில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்ட 60 கிலோ மாம்பழம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மருந்து தெளிக்க பயன்படுத்தும் 2 ஸ்பிரேயர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாக இருக்கும். தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காய் வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிய முடியும்.

    பழக்கடை உரிமை யாளர்களுக்கு வரும் 14-ந் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பழ விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.

    ×