என் மலர்tooltip icon

    சேலம்

    • அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
    • புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் குண்ட நாற்றம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 26). இவரும், ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் அடுத்த நைனூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் பூர்ணிமா (20) என்பவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக திருப்பூரிலிருந்து பஸ்சில் பூர்ணிமா ஏறினார். அப்போது அவரை அன்பரசன் அவரது நண்பர் மற்றும் கார்த்திக் ஆகியோர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அன்பரசன் செல்போன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு கார்த்தி மற்றும் பூர்ணிமா ஆகியோரை புதிய பஸ் நிலையத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார்த்திக் மற்றும் பூர்ணிமாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்பரசன் இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து மாயமான ஆந்திர மாநில இளம்பெண்ணையும் வாலிபரையும் தேடி வருகிறார்.

    • புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.
    • கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது.

    ேசலம்:

    சேலம் ஜவுளி கடை பஸ் நிறுத்தம் புலிக்குத்தி தெரு வில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான ரேசன் கடை உள்ளது.

    இங்கு கஸ்தூரி என்ற பெண், விற்பனையாளராக உள்ளார். இவர் கடந்த 4-ந்தேதி சேலம் குகையை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரேசன் கார்டு இல்லாமல் 50 கிலோ அரிசியை முறைகேடாக விற்றதாக புகார் எழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் , கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கஸ்தூரியை சஸ்பெண்டு செய்து மண்டல இணைப்ப திவாளர் ரவிக்குமார் நேற்று உத்தரவிட்டார். மேலும் அந்த உத்தரவில், எந்த வித முன்னறிவிப்பு இன்றி தலைமையிடத்தை விட்டு விற்பனையாளர் வெளியே செல்லக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கு பதில் புலிக்குத்தி தெருவில் உள்ள ரேசன் கடைக்கு மற்றொரு ரேசன் கடை விற்பனையாளர் மோக னம்மாள் என்பவர் நிய மிக்கப்பட்டு கூடுதல் பொ றுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ஆசிரியர் ஹரிஹரன் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக ஹரிஹரன் என்பவர்

    பணிபுரிந்து வந்தார். இதனிடையே, ஆசிரியர் ஹரிஹரன் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹரிஹரன், மதுகுடித்து விட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் வகுப்பறைக்கு செல்லாமல், தூங்கிக் கொண்டிருப்பார் என மாணவர்கள்

    தெரிவித்தனர். மேலும், மதுபோதையில் மாணவி களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

    இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதால், தலைமை ஆசிரியரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட நேரடி விசா ரணையில் அவர் மீதுயுள்ள அனைத்து குற்றச்சாட்டு களும் உறுதியானது.

    இதனையடுத்து முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மேலும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து துறை ரீதியான உயர்மட்ட விசார ணையும் நடைபெற உள்ளது என்றனர்.

    • மல்லியக்கரை - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சா லையில், ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இதனால் அவ்வழியாக செல்லும் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்ட கோட்டப்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலத்தில் இருந்து மல்லியக்கரை - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சா லையில், ரெயில்வே மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் சாலைப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, வருகிற 15-ந் தேதி முதல் மல்லியக்கரை - ஆத்தூர் வழியாக செல்லும் இருசக்கர மற்றும் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் அருகில் உள்ள ஸ்டீல் மில் ரோட்டில் உள்ள ரெயில்வே கீழ்பா லத்தை பயன்படுத்தி அவ்வழியாக செல்லலாம்.

    ராசிபுரம் - ஆத்தூர் செல்லும் கனரக வாக னங்கள் வாழப்பாடி வழியா கவும் (வாழப்பாடி- திம்ம நாயக்கன்பட்டி சாலை), தம்மம்பட்டி- ஆத்தூர் செல்லும் கனரக வாக னங்கள் தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையை பயன்படுத்தி மஞ்சினி வழி யாக ஆத்தூர் செல்லுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும், மல்லியக்கரை - ஆத்தூர் சாலையில் ரெயில்வே மேம்பால பணி கள் முடியும் வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார்.
    • தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் ரெட்டியூர் பகுதி மற்றும் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியிலும் நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் முப்பிடாரியம்மாள் எனும் மூதாட்டி சேர்க்கபப்ட்டார். இந்த மூதாட்டி வழி தவறி வந்து அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார்.

    தங்குவதற்கு இடமின்றி முட்புதரின் உள்ளே படுத்துக் கிடந்தவரை அந்தப் பகுதி பொதுமக்கள் பார்த்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவலர்கள் பிரபாகரன், கோவிந்த ராஜ், சுரேஷ் ஆகியோர் உடனடி யாக விரைந்து வந்து விசாரித்து அவரை மீட்டு அருகிலிருந்த நிறைவாழ்வு முதியோர் இல்லத்தில் இல்ல மேலாளர் நிவேதிதா வசம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் ராஜபா ளையத்தை சேர்ந்தவர் என்றும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்படட நிலையில் போக்கி டம் இல்லாமல் கடந்த சில மாதங்க ளாகவே சுற்றித்திரிவதாகவும் கூறினார். இல்லத்தில் சேர்க்கப்பட்ட பிறகு மூதாட்டி மகிழ்சசியுடன் ஊர் பொதுமக்க ளுக்கும், காவலர்களுக்கும் முதியோர் இல்ல நிர்வாகிகள் அண்ணாதுரை, ராமஜெயம் ஆகியோருக்கும் நன்றி கூறினார்.

    • சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
    • இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கொட்டவாடி பிரிவு சாலை அருகே சின்ன கிருஷ்ணாபுரம் எல்லையில், பிரசித்தி பெற்ற புதுப்பட்டி மாரி யம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவி லில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான பங்குனி இறுதி வாரத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு தேர்த்திரு விழாவை யொட்டி கடந்த 2 நாட்களாக ஊர் மக்கள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பிரமாண்டமான மரத்தேர் கலைநயமிக்க வண்ண சேலைகளால் அலங்க ரிக்கப்பட்டு, நேற்று மாலை, கோயில் வளாகத்தில் இருந்து முதல்நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். மீண்டும் இன்று மாலை கோயிலை சுற்றி திருத்தேர் பவனி வந்து நிலை நிறுத்தப்படும்.

    இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், தங்கள் வேண்டு தல் நிறைவேற்றிய அம்ம னுக்கு, உடலில் அலகு குத்தி யும், பூங்கரகம், அக்னிகரகம் எடுத்தும், உருளதண்டம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், சத்தாபரண நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    • கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற திருவிழா கலை நிகழ்ச்சிகள், மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடுகின்ற இடங்களில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போயின.
    • தாரமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு உரிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற திருவிழா கலை நிகழ்ச்சிகள், மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடுகின்ற இடங்க ளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போயின. இது குறித்து பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவு தாரமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு உரிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

    தொடர் விசாரணையில் அவர்கள் இளம்பிள்ளை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (36). மற்றும் அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த அல்லி முத்து (46) என்பதும், 2 பேரும் நெசவு தொழில் செய்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களுக்கு சென்று திரு விழா கலை நிகழ்ச்சி நடை பெறும் போது இரு சக்கர வாகனங்களை திருடி சென்று விற்று செலவு செய்து வந்துள்ளது விசார ணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    திருடிய மோட்டார் சைக்கிள்களை அவர்கள் பல்வேறு ஊர்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு சில வாகனங்களை அடமானம் வைத்தும் பணம் பெற்றுள்ள னர். இவர்கள் கொடுத்த தகவலின் படி மொத்தம் 17 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். பின்பு அவற்றை தார மங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    தாரமங்கலம், ஓமலூர். தொளசம்பட்டி. தீவட்டி பட்டி. நங்கவள்ளி. ஜலகண்டபுரம். கொங்கணா புரம். மகுடஞ்சாவடி உள்ளிட்ட காவல் நிலை யத்தில் பதிவான வாக னங்களை பிரித்து அனுப்பி யுள்ளனர்.அனைத்து மோட்டார் சைக்கிள்களும் நீதி மன்றத்தில் ஒப்படைத்து பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாக் போலீசார் தெரிவித்தனர்.

    • ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டு விசாரித்தார்.
    • பெறப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீதும் உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெட்டிசன் மேளா நடந்தது. இதை அறிந்த மலைவாழ் மக்கள் பலர், காலையிலேயே போலீஸ் நிலையம் வந்து காத்திருந்து மனுக்களை வழங்கினர்.

    ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டு விசாரித்தார். இதில், பெறப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீதும் உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    மேளாவில் 67 மலை கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் சப்-இஸ்பெக்டர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீ சார் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றை தீர்க்க மாதம் ஒரு முறையாவது, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து பொதுமக்களிடம் புகார் பெற்று விசாரிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நங்கவள்ளி:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.

    கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.

    வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,562 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,422 கன அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1,562 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,422 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரை விட, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 102.68 அடியாக இருந்து அணையின் நீர்மட்டம், இன்று காலை 102.65 அடியாக சரிந்தது.

    • தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அதன் காரணமாக அந்த தெருவில் இருந்த குடிநீர் குழாயும் அகற்றப்பட்டது.

    ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு மேலாகியும் காங்கிரீட் சாலையும் அமைக்காமல் இருக்கின்றது. அதனால் குடிநீர் குழாயும் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்தூர்-ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ஆத்தூர் ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றதை அடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
    • 2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஓலைப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    பரிதாபமாக இறந்தார்

    அதனை தொடர்ந்து இந்துமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் மயக்கம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஏற்கனவே இதுபோன்று ஓமலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி கஞ்சநாயக்கன்பட்டி காட்டூரை சேர்ந்த சண்முகம் மனைவி சோனியா (29) என்பவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவரது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது சோனியா பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று இந்துமதியும் இறந்திருப்பதால் டாக்டர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மருத்துவ குழுவினர் ஆய்வு

    இந்த நிலையில் இந்துமதி இறந்த மறுநாள் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் , ஓமலூர் அரசு மருத்துவமனையில் இந்துமதிக்கு அளித்த சிகிச்சை முறை, சிகிச்சை யின்போது வழங்கிய மயக்க மருந்தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

    சப்-கலெக்டர் நியமனம்

    இது குறித்து சேலம் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த சப்-கலெக்டர் நியமிக்கப் பட்டுள்ளது. அடுத்த வாரம் அவரது தலைமையில் இந்துமதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதுபோல் மருத்துவ குழு வழங்கிய தகவல், பிரேத பரிசோதனை முடிவு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் இந்துமதி கணவர், அவரது பெற்றோர் ஆகியோரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது, என்றனர்.

    ×