என் மலர்
நீங்கள் தேடியது "girl dies பெண் சாவு"
- நல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தங்காயி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமிக்கு விளக்கு வைத்துள்ளார்.
- அப்போது நல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள தங்காயி அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமிக்கு விளக்கு வைத்துள்ளார் . பின்னர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த விளக்கு எரிந்து கொண்டிருந்தது . அப்போது நல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து சேலையில் பிடித்த தீயை அனைத்தனர். இருப்பினும் சேலையில் தீப்பிடித்து எரிந்ததில் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இன்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
- (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
- 2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஓலைப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்துமதி (32). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
2-ம் முறை கர்ப்பமான இந்துமதி, கடந்த 4-ந்தேதி பிரசவத்துக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 5-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பரிதாபமாக இறந்தார்
அதனை தொடர்ந்து இந்துமதிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவர் மயக்கம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகியது. இதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே இதுபோன்று ஓமலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி கஞ்சநாயக்கன்பட்டி காட்டூரை சேர்ந்த சண்முகம் மனைவி சோனியா (29) என்பவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் அவரது உடல் நிலை மோசமாகவே மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது சோனியா பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று இந்துமதியும் இறந்திருப்பதால் டாக்டர்கள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மருத்துவ குழுவினர் ஆய்வு
இந்த நிலையில் இந்துமதி இறந்த மறுநாள் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ குழுவினர் , ஓமலூர் அரசு மருத்துவமனையில் இந்துமதிக்கு அளித்த சிகிச்சை முறை, சிகிச்சை யின்போது வழங்கிய மயக்க மருந்தின் அளவு உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
சப்-கலெக்டர் நியமனம்
இது குறித்து சேலம் மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்த சப்-கலெக்டர் நியமிக்கப் பட்டுள்ளது. அடுத்த வாரம் அவரது தலைமையில் இந்துமதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதுபோல் மருத்துவ குழு வழங்கிய தகவல், பிரேத பரிசோதனை முடிவு ஆகியவையும் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் இந்துமதி கணவர், அவரது பெற்றோர் ஆகியோரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட உள்ளது, என்றனர்.
- கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
- திடீரென நெஞ்சு வலி அதிகமாக உள்ளது எனக் கூறி மகேஸ்வரி மயக்கமடைந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் இளம்பிள்ளை சித்தர்கோவில், நாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி ( வயது 46). இவர் செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு கிழங்கு மாவு மில்லில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் இவர் மட்டும் தனியாக சித்தர் கோவில் வீட்டில் இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மில்லுக்கு வேலைக்கு வந்தார். அப்போது திடீரென நெஞ்சு வலி அதிகமாக உள்ளது எனக் கூறி மகேஸ்வரி மயக்கமடைந்து கீழே விழுந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த உடன் பணிபுரியும் நபர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






