என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபோதையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    மதுபோதையில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் சஸ்பெண்டு

    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • ஆசிரியர் ஹரிஹரன் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாரத்திற்கு உட்பட்ட முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக ஹரிஹரன் என்பவர்

    பணிபுரிந்து வந்தார். இதனிடையே, ஆசிரியர் ஹரிஹரன் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஹரிஹரன், மதுகுடித்து விட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் வகுப்பறைக்கு செல்லாமல், தூங்கிக் கொண்டிருப்பார் என மாணவர்கள்

    தெரிவித்தனர். மேலும், மதுபோதையில் மாணவி களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

    இதுதொடர்பாக கேள்வி எழுப்பியதால், தலைமை ஆசிரியரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து பள்ளியில் நடத்தப்பட்ட நேரடி விசா ரணையில் அவர் மீதுயுள்ள அனைத்து குற்றச்சாட்டு களும் உறுதியானது.

    இதனையடுத்து முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மேலும் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதைதொடர்ந்து துறை ரீதியான உயர்மட்ட விசார ணையும் நடைபெற உள்ளது என்றனர்.

    Next Story
    ×