என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான கொள்ளையர்களையும், அவர்களை மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
தாரமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
- கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற திருவிழா கலை நிகழ்ச்சிகள், மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடுகின்ற இடங்களில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போயின.
- தாரமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு உரிய 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற திருவிழா கலை நிகழ்ச்சிகள், மற்றும் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடுகின்ற இடங்க ளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போயின. இது குறித்து பல்வேறு புகார்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இரவு தாரமங்கலம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது தாரமங்கலம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு உரிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.
தொடர் விசாரணையில் அவர்கள் இளம்பிள்ளை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (36). மற்றும் அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த அல்லி முத்து (46) என்பதும், 2 பேரும் நெசவு தொழில் செய்து கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஊர்களுக்கு சென்று திரு விழா கலை நிகழ்ச்சி நடை பெறும் போது இரு சக்கர வாகனங்களை திருடி சென்று விற்று செலவு செய்து வந்துள்ளது விசார ணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
திருடிய மோட்டார் சைக்கிள்களை அவர்கள் பல்வேறு ஊர்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு சில வாகனங்களை அடமானம் வைத்தும் பணம் பெற்றுள்ள னர். இவர்கள் கொடுத்த தகவலின் படி மொத்தம் 17 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்த னர். பின்பு அவற்றை தார மங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தாரமங்கலம், ஓமலூர். தொளசம்பட்டி. தீவட்டி பட்டி. நங்கவள்ளி. ஜலகண்டபுரம். கொங்கணா புரம். மகுடஞ்சாவடி உள்ளிட்ட காவல் நிலை யத்தில் பதிவான வாக னங்களை பிரித்து அனுப்பி யுள்ளனர்.அனைத்து மோட்டார் சைக்கிள்களும் நீதி மன்றத்தில் ஒப்படைத்து பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாக் போலீசார் தெரிவித்தனர்.






