என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு 60 கிலோ மாம்பழம் பறிமுதல்
- குடோன்களில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்டு மா, வாழை ஆகியவற்றை பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சேலம் சின்னகடை வீதியில் உள்ள 16 பழக்கடைகளில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களில் உள்ள பழக்கடைகள், குடோன்களில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்டு மா, வாழை ஆகியவற்றை பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் சின்னகடை வீதியில் உள்ள 16 பழக்கடைகளில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் எத்திப்பான் மருந்து தெளிக்கப்பட்ட 60 கிலோ மாம்பழம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மருந்து தெளிக்க பயன்படுத்தும் 2 ஸ்பிரேயர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் நல்ல கனமாக இருக்கும். தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தோலை நீக்கி பார்த்தால் உள்ளே காய் வெட்டாக இருக்கும். காம்பு பகுதியில் லேசாக கீறினால் புளிப்பு சுவைக்கான மணம் வீசும். இதன்மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டறிய முடியும்.
பழக்கடை உரிமை யாளர்களுக்கு வரும் 14-ந் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், பழ விற்பனையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்றார்.






