என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினீர்கள்உருக்கமான வரிகளுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
    X

    உருக்கமான வரிகளுடன் வைக்கப்பட்ட பேனரை படத்தில் காணலாம்.

    "என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினீர்கள்"உருக்கமான வரிகளுடன் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு

    • சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் பகத்சிங் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது.
    • அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் பகத்சிங் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர்.

    மரம் வெட்டி சாய்ப்பு

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தியதில், மரத்தின் அருகில் வசித்து வரும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் மறைப்பதாக கூறி அந்த மரத்தை வெட்டியதும், மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் மரத்தை ெவட்டி சாய்த்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    புகாரை ஏற்க மறுப்பு

    ஆனால் போலீசார், புகாரை பெற்றுக் கொள்ள வில்லை. வருவாய் துறையினரை நாடுங்கள் என தெரிவித்து விட்டனர். அதே நேரத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    இதையடுத்து அந்த மரத்தை வெட்டியதை கண்டித்து உருக்கமான வரிகளுடன் பிளக்ஸ் பேனர் தயார் செய்து, மரம் வெட்டிய இடத்தில் வைத்துள்ளனர். அதில், வெட்டப்பட்ட மரம் பேசுவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளது.

    அந்த பேனரில் நீர் தந்தேன், நிழல் தந்தேன், மகிழ்வித்தேன், காற்று தந்தேன், அனைத்து உயிருக்கும் நன்மை மட்டுமே செய்தேன், மனிதர்களே என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினார்கள், ஏன் நீங்கள் தடுக்கவில்லை என உருக்கமாக எழுதப் பட்டிருந்தது.

    இதனை அவ்வழியாக செல்லும் மக்கள் பார்த்து செல்கின்றனர். மரமும் ஒரு உயிர்தானே...அது கண்ணீர் வடிப்பது நியாயம்தானே...என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

    Next Story
    ×