என் மலர்
நீங்கள் தேடியது "குறுக்கே பாலம்"
- சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வசிஷ்டநதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- பேளூரை கடந்த தும், 13-வது கி.மீ. தூரத்தில் ஏ.குமாரபாளையம் அணைக்கட்டு அருகே, பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து 22 கி.மீ., தூரம் கடந்து கரியக்கோயில் ஆறு இணைகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி அபிநவம்-வைத்தியகவுண்டன் புதூர் சாலையை, சேலம்-–சென்னை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வசிஷ்டநதியின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி அருகே அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, புழுதிக்குட்டையில் இருந்து குறிச்சி, கோணஞ்செட்டியூர் வழியாக பேளூரை கடந்த தும், 13-வது கி.மீ. தூரத்தில் ஏ.குமாரபாளையம் அணைக்கட்டு அருகே, பாப்பநாயக்கன்பட்டியில் இருந்து 22 கி.மீ., தூரம் கடந்து கரியக்கோயில் ஆறு இணைகிறது.
வசிஷ்டநதி என்ற பெயரிலேயே படையாச்சியூர், கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம், ஆத்தூர், தலைவாசல் வழியாக பல நீரோடைகளை இணைத்துக் கொண்டு, சேலம் மாவட்ட எல்லைக்குள் 85 கி.மீ., தூரம் பயணிக்கும் வசிஷ்ட நதி, கொல்லிமலையில் உற்பத்தியாகி தம்மம்பட்டி, கெங்கவல்லி வழியாக வழிந்தோடி, சுவேதா நதியுடன் இணைந்து, வெள்ளாறு என்ற பெயரில் கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது. 208 கி.மீ., தூரத்தை கடந்து சென்று பல்வேறு கிளையாறுக ளுடன் இணைந்து, இறுதி யாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே வசிஷ்டநதி வங்கக்கடலில் கலக்கிறது.
புழுதிக்குட்டை ஆணை மடுவு அணை, பாப்ப நாயக்கன்பட்டி கரியக்கோ யில் அணை நிரம்பும் போது உபநீர் திறக்கப்படுவதாலும், அணையில் இருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறக்கும் போதும் வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது, வசிஷ்டநதியின் மேற்கு கரையில் அமைந்துள்ள வைத்தியகவுண்டன் புதூரில் இருந்து கிழக்கு கரையிலுள்ள ஏத்தாப்பூர் அபிநவம் கிராமத்திற்கு ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதனால், வைத்திய கவுண்டன்புதுார், ஏத்தாப்பூர் அபிநவம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், ஏத்தாப்பூர் அல்லது பெரியகிருஷ்ணாபுரம் வழியாக சென்று சேலம்–-சென்னை சாலையை அடைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, ஏத்தாப்பூர், அவிநவம்–, வைத்தியக வுண்டன்புதூர் சாலையில் வசிஷ்டநதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சேலம் மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.






