என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் என்ஜினீயர் தர்ணா"

    • திருமணம் செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி செல்வகுமார் காலம் கடத்தி வந்தார்.
    • ஸ்வேதா செல்வகுமார் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் தெற்கு அம்மாபேட்டை, நாமமலை அடிவாரம் பகுயில் வசித்து வருபவர் அங்கப்பன். இவருடைய மகன் செல்வகுமார் (வயது 28).

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், குஞ்சிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்வேதா (25). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    இதே நிறுவனத்தில் செல்வகுமாரும் பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளாடைவில் காதலாக மாறியது. செல்வகுமார் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் சாக்குபோக்கு சொல்லி செல்வகுமார் காலம் கடத்தி வந்தார்.

    அதனால், நேற்று சேலம் வந்த ஸ்வேதா செல்வகுமார் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். திருமணத்துக்கு சம்மதிக்கும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என கூறினார்.

    இதனால் அம்மாப்பேட்டை போலீசார், அங்கு வந்து ஸ்வேதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை அடுத்து, ஸ்வேதா தர்ணாவை கைவிட்டார்.

    ×