என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு
- பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான்.
- எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பெரியவடகம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மகன் பேரரசு (வயது 6). சம்பவத்தன்று, சிறுவன் பேரரசு வீட்டின் மொட்டை மாடியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து திடீரென தவறி விழுந்தான்.
இதில் படுகாயம் அடைந்த சிறுவனை, உடனடியாக மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று சிறுவன் பேரரசு பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






