என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆணையாளரிடம் மனு அளிக்க வந்த வியாபாரிகள்.
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலிக்க கோரி வியாபாரிகள் ஆணையாளரிடம் மனு
- தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் பொது ஏலம் விடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு அதிகபடியான ஏல தொகையாக ரூ. 1.25 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் பொது ஏலம் விடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கபட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அதிகபடியான ஏல தொகையாக ரூ. 1.25 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது.
இதனால் ஒப்பந்ததா ரர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்து வந்த நிலையில் பலமுறை வியா பாரிகள் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் குத்தகை காலம் நிறைவடைத்து விட்டதால் கடந்த 10 நாட்களாக நகராட்சி நிர்வாகம் சுங்க கட்டணத்தை வசூலித்து வந்தது.
அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலித்து வந்ததால் வியாபாரிகள் குறைந்த கட்டணத்தை செலுத்தி மிகுந்த மகிழ்ச்சி யுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று 2023-2024-ம் ஆண்டிற்கான ஏலம் நடைபெறுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று காலை மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து நகராட்சி ஆணையாளரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கடந்த ஆண்டில் ஏலம் எடுத்த குத்தகைதாரர்கள் தங்களி டம் அதிக கட்டணம் வசூல் செய்து கொண்டு முறையான ரசீது வழங்காமல் வந்தனர். தற்போது மீண்டும் ஏலம் எடுக்கும் குத்தகை தாரர்கள் அரசு நிர்ணயம் செய்த பெரிய கடைகளுக்கு 35 ரூபாயும். சிறிய கடைகளுக்கு 15 ரூபாயும்.
பூக்கூடை ஒன்றுக்கு 5 ரூபாயும். விவசாயிகளிடம் சிப்பம் ஒன்று 5 ரூபாய் வீதமும் கட்டணம் வசூலிக்க வும் அந்த தொகைக்கு உரிய ரசீது வழங்கவும் நகராட்சி நிர்வாகம் உத்தரவு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நேற்று மார்க்கெட் குத்தகை ஏலம் நடைபெற இருந்த நிலையில் வியா பாரிகள் திரண்டு வந்ததால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






