என் மலர்tooltip icon

    சேலம்

    • தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
    • தவெக கூட்டத்தின் போது மயங்கி விழுந்தார்.

    சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, சில பத்திரிகையாளர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே மோதல். தவெக தொண்டர்கள் தங்களைத் தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 37 வயது நபர், இன்று சேலத்தில் நடந்த தவெக கட்சியின் கூட்டத்தின் போது மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த தவெக-வினர் மயங்கி விழுந்தவரை அங்கிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    "தவெக நிகழ்ச்சியின் போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ உதவிக்காக அவர் அவசரமாக அழைத்து செல்லப்பட்டார், ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது" என்று போலீசார் தெரிவித்தனர்.


    • சேலம் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் உரை.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறலால் சூரஜ் உயிரிழந்தார். கூட்டத்தில் பங்கேற்ற போது வலிப்பு ஏற்பட்ட தவெக நிர்வாகியை மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

    • ஆட்சிக்கு வந்தால் அவங்க அது தரல, இது தரல என புலம்ப மாட்டேன்.
    • இது சட்டமன்ற தேர்தல், நமது டார்கெட் தி.மு.க. தான்.

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்? மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் இத்தனை போராட்டங்கள் நடக்கிறது.

    * இடம், குடிநீர், வேலை, விலைவாசி என அனைத்தும் பிரச்சனையாக இருக்கும்போது மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள்?

    * ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு 70%, கடந்தாண்டு 90%, இப்போது 80% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்.

    * பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே வளர்ந்த புலவர் பெருமானே, இல்லை புளுகர் பெருமானே... முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுவது அனைத்துமே அண்டப்புளுகு ஆகாசப்புளுகு.

    * ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு ஒத்துவராத திட்டங்களை அறிவிக்க மாட்டேன்.

    * ஆட்சிக்கு வந்தால் அவங்க அது தரல, இது தரல என புலம்ப மாட்டேன். உங்களுக்காக எந்த எக்ஸ்ட்ரீம் வரைக்கும் சென்று போராடுவேன்.

    * களமே சொல்கிறது இரண்டே இரண்டு பேர் இடையில் தான் போட்டி. ஒன்னு தூய சக்தி த.வெ.க. மற்றொன்று தீய சக்தி தி.மு.க.

    * விஜய் அவரை எதிர்க்கவில்லை, இவரை எதிர்க்கவில்லை என்கிறார்கள். இது சட்டமன்ற தேர்தல், நமது டார்கெட் தி.மு.க. தான்.

    * மக்களை விரும்பும் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? இது தான் தேர்தல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை.
    • த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * 2 ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீத மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.

    * 75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று த.வெ.க. மக்கள் சக்தியாக மாறி உள்ளது.

    * சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

    * நமக்கு அவர்களைபோல் கொள்ளையடிக்க அனுபவம் இல்லை, அது எல்லாம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

    * மக்களை நேசிக்கும் நல்ல குணம் இருந்தாலே போதும், ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க முடியும்.

    * கட்சி ஆரம்பித்த அண்ணா, எம்.ஜி.ஆர்., கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தவர்கள் தான் நம்மை அனுபவம் இல்லாதவர்கள் என கூறுகின்றனர்.

    * என்னால் ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் செய்து காட்டுகிறேன்.

    * ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டு கடந்து விட்டது. இப்போது தான் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி கனவை கேட்கிறார்கள்.

    * மக்களின் கனவு உங்களுக்கு தெரியுமா ஸ்டாலின் சார்? ஏதாவது நல்லது செய்வீர்கள் என நினைத்துதான் உங்களுக்கு வாக்களித்தனர்.

    * ஸ்டாலின் சார் உங்களின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். த.வெ.க. ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் மக்களின் கனவு.

    * தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்கிறார் ஸ்டாலின். ஸ்டாலின் சார் தான் அவுட் ஆஃப் கன்ட்ரோல்.

    * மொத்தத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள்.
    • அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கண்டதும் தொண்டர்கள உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.

    கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-

    மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் ஏமாறுவீர்களா?

    வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.

    எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.

    எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.

    அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?

    அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?

    அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.

    என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?

    75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.
    • விஜய் செய்த தவறு தான் என்ன?

    சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * உங்களிடம் ஓட்டு கேட்காமல், நீதி கேட்டும் வந்துள்ளேன்.

    * விஜய் செய்த தவறு தான் என்ன? என்னை நேசித்த மக்களுக்காக வந்த விஜய் செய்த தவறு தான் என்ன?

    * மக்களை சந்திக்க மற்றவர்களுக்கு அனுமதி தரும்போது விஜய்க்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?

    * மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.

    * வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.

    * பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.
    • நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.

    சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து காரில் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு வந்த அவருக்கு வழி நெடுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மக்கள் சந்திப்பு கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜயை கண்டதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் கூறியதாவது:

    * நம்மை ஏளனமாக மற்றவர்கள் நினைக்கும் நேரத்தில் தோன்றுவது தான் கரேஜ்.

    * தைரியம் தான் அனைத்திற்கும் அடிப்படை.

    * நம்மை தாழ்த்தும்போது தான் உத்வேகம் வரும்.

    * எந்த விஷயத்தில் நம்மை கிண்டல், கேலியாக பேசுகிறார்களோ அதை வெற்றியாக மாற்றிக்காட்டுவோம்.

    * என்னை சீண்டிப்பார்ப்பவர்களுக்கு ஒன்று கூறுகிறேன், என் தாய் நாடாக தமிழ்நாடு தான் எனது வீடு.

    * விஜய் பனையூரை விட்டு வெளியே வா என அழைப்பவர்களுக்கு என் வீடு எங்கே இருக்கிறது என்றாவது தெரியுமா?

    * என் வீடான தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும் என் சொந்தம், தமிழ்நாட்டின் முதல் படை வீரன் நான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது.
    • நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை சேலம் வந்தார்.

    சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தாளமுத்து நடராஜன் திடலுக்கு வருகை தந்த விஜய்க்கு பூத்தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சந்திப்பு கூட்டத்திற்கு வரும் நிர்வாகிகளுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், ஓஆர்எஸ், தொப்பி அடங்கிய மஞ்சப்பை கொடுக்கப்பட்டு வருகிறது.

    • 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு.
    • கூட்டம் நடைபெறும் இடத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு.

    சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார்.

    விஜய் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் காலை 11 மணிக்கு ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கும் திடலுக்கு செல்கிறார்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் நடைபெறும் திடலில் இருந்து முன்னதாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாகிகள் அமர்வதற்கு ஆங்காங்கே இருக்கைகள், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    கூட்டம் நடைபெறும் இடத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
    • தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில், சேலத்தில் விஜய் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "5 மணி நேரம், 6 மணி நேரம் தளபதிக்காக நிப்போமா?..தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது, ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவா, நீங்கதான் அவன பாத்துக்கணும். நமக்கு முக்கியம்" என்று பேசியுள்ளார்.

    இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (74). அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து உதவி தலைமை ஆசிரியராக உயர்வு பெற்ற இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.

    சிறந்த இறகு பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு வீரர். மிதிவண்டி ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர்.

    வித்தியாசமான சிந்தனை கொண்ட இவர் இவரது சொந்த கிராமமான முத்தம்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் பளிங்கு கற்களில் இவரது படத்துடன் கூடிய கல்லறையை தனக்கு தானே அமைத்துக் கொண்டார்.

    அந்த கல்லறையில் முத்தம்பட்டி ஆறுமுகம் வாரியார், மனைவி மாரியம்மாளின் மகன் காசி, குருசாமி பிச்சமுத்து, உதவி தலைமை ஆசிரியர் பிறப்பு 1.7.1952, இறப்பு .... 20.. என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவரது விருப்பப்படி, இவர் தனக்குத்தானே கட்டிக் கொண்ட கல்லறையில், இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே கல்லறை அமைத்துக் கொண்டு உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழப்பாடி பகுதியில் இவரது இறப்பு பேசு பொருளாகியுள்ளது.

    • தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.
    • நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.

    சேலம்:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் சேலத்தில் வருகிற 13-ந்தேதி விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த வாரம் மனு கொடுத்தனர். மனுவில் மகுடஞ்சாவடி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு இருந்தனர்.

    சீலநாயக்கன்பட்டியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது வாகன நிறுத்த போதிய இடம் இல்லை என்றும், கூடுதலாக இடம் தேர்வு செய்யும் படியும் கூறினர். மேலும் தமிழக அரசின் அரசாணைப்படி 10 வகை ஆவணங்களுடன் மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க அறிவுறுத்தினர்.

    த.வெ.க. நிர்வாகிகள் திட்டமிட்டப்படி வருகிற 13-ந்தேதி விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். நேற்று இரவு மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் விஜய் கூட்டத்துக்கு அனுமதி கேட்டு மீண்டும் கடிதம் கொடுத்தார்.

    இந்நிலையில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    சீலநாயக்கன்பட்டியில் உள்ள தாளமுத்து நடராசர் மைதானத்தில் பிப்.13-ந்தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 13-ந்தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

    ×