என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடநட்தது
    • பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த புதுப்பட்டுகிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 9-ந் தேதி மகாபாரத அக்னி வசந்தபெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் கடைசி நாளான நேற்று துரி யோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கட்டைக்கூத்து கலைஞர்கள் துரியோதனன், பீமன் வேடமிட்டு துரியோதனன் படுகள காட்சியை நடித் துக்காட்டினர். இதைத்தொ டர்ந்து நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத் தினர்.

    • நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது
    • ரெயில்வே அதிகாரிகள் தகவல்

    அரக்கோணம்,

    சென்னை கோட்டத்தில் அம்ரீத் பாரத் திட்டத்தின் மூலமாக 15 ரெயில் நிலையங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட பட்டியலில் அரக்கோணம் இடம்பெற்றுள்ளது.

    அதற்கான பணிகளை தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் வந்தே பாரத் ரெயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்படுகிறது. இதுவரை பயணிகள் இந்த ரெயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.

    தற்போது வந்தே பாரத் ரெயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில்கள் தயாரிப்பு பணிகளும் ரெயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி அரக்கோணம்- ஜோலார்பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரெயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரெயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக இயக்கப்பட உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே மண்டல பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினரும், அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க தலைவருமான நைனா மாசிலாமணி கூறும்போது:-

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ரெயில் நிலையமாக அரக்கோணம் உள்ளது. இங்கு 8 நடைமேடைகள் உள்ளன. பலதரப்பட்ட மக்கள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். ரெயில் நிலையத்தை மேம்படுத்த பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக ெரயிலுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பெட்டிகள் எங்கு உள்ளது என்பதை அறிய மின்சாரத்தில் இயங்கும் கோச் பொசிஷன் போர்டு அமைக்கப்படாமல் உள்ளது.

    இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படு கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது இவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திருவள்ளூரில் இருந்து வரும் 3,4-வது அகல ரெயில் பாதைகள் குறுக்கும் நெடுக்கமாக உள்ளன.

    மேல் பாக்கம் ரெயில் நிலையம் வெளிப்புறம் சிக்னல் பாயிண்ட் வரை பாதைகளை நேராக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு ஏக்கருக்கு ரூ.250 அரசு மானியத்தில் ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் வினியோகம்
    • வேளாண் குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், விவசாயத்தினை ஊக் குவிக்க கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பஞ்சாயத்து கிராமங்களிலும் ஒரு விவசாய குடும்பத்திற்கு 2 தென்னங்கன்று வீதம் 300 விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 24 ஆயிரத்து 600 குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்று வீதம் 49 ஆயிரத்து 200 தென்னங்கன்றுகள் ரூ.29 லட்சத்து 52 ஆயிரம் மானியத்திலும், 356 விவசாயிகள் தங்கள் வயலில் பணியாற்ற பயன்படுத்தும் வகையில் கடப்பாரை, தாளா, மண்வெட்டி, களைக்கொத்தி, 2 அரிவாள் ஆகிய பண்ணைக்கருவிகள் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் அரசு மானியத்திலும் வழங்கப்பட்டுள் ளது.

    இதேபோல் 358 பயனாளிகளுக்கு ரூ.830 மானியத்தில் ரூ.2 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பீட்டில் தார்பாலின், 5 ஆயிரத்து 190 பயனாளிகளுக்கு ரூ.150 லிட்டர் வீதம் ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் மானியத்திலும் உயிரி உரம் (திரவம்) வழங்கப்பட் டுள்ளது.மேலும் 1,425 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங் கும் விசை தெளிப்பான்கள் ரூ.2 ஆயிரம் மானியம் வீதம் ரூ.39 லட்சத்து 68 ஆயிரம் மானியத்திலும், ஒரு ஏக்கருக்கு ரூ.250 அரசு மானியத்தில் ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப் பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.85 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டில் 31 ஆயிரத்து 929 வேளாண் குடும்பங்களுக்கு வேளாண் உபகரணத் தொகுப் புகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • இறந்து விடுவேன் என கூறி வந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை அடுத்த கரிக்கந் தாங்கல் கிராமத்தைச்சேர்ந்த முனுசாமி என்பவர் தெருக் கூத்து நாடககம்பெனி நடத்தி வருகிறார். தெருக்கூத்து நாடக கம்பெனியில் ஸ்ரீதர் (வயது 26), அருண் (24) ஆகிய 2 மகன்களும் தெருக்கூத்து நாடகத்தில் நடித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு சுண் டிவாக்கம் கிராமத்தில் தெருக் கூத்து நாடகம் நடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

    இரவு 10.30 மணி அளவில் 3 பேரும் தூங்கசென்றனர். நள்ளிரவில் ஸ்ரீதர் எழுந்து பார்த்தபோது அவரது தம்பி அருண் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.

    ஸ்ரீதர் கூச்சலிடவே தந்தை முனுசாமி அதிர்ச்சியில் எழுந்தார். பின்னர் அவர்கள் அருணை கீழே இறக்கி 108 ஆம்புலன்சை வரவைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்த னர். அவர் 2 வருடமாக வலிப்பு நோயால் அவதிப் பட்டுவந்துள்ளார். அடிக்கடி இ விடுவேன் என்று அருண் கூறி வந்தார்.

    இந்த நிலையில் வலிப்பு நோயால் அருண் தூக்குப்போட்டுக் கொண்டார் என்று முனு சாமி தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சர வணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்
    • புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்த போது வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகங்களில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும். இந்தியாவில் அதிகமான அன்னிய செலவானி பெற்று தருகின்ற மாவட்டம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம். இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டம் ஆகும்.

    தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் அதிகளவில் பணியாற்றி வந்தார்கள்.

    எந்திரங்கள் வந்த பிறகு பாதி பேர் வேலை இழந்துள்ளார்கள். எனவே வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட்டுறவு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கொண்டு வரவேண்டும்

    தமிழ்நாடு முழுவதும் தலித் மாணவர்கள் எந்த தொழிற்கல்வியில் சேர்ந்தாலும் அதில் நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, அரசு ஒதுக்கீடாக இருந்தாலும் அதனுடைய கல்வி கட்டணத்தை அரசாங்கம் செலுத்த வேண்டும்.

    இதுபோன்று தெலுங்கானா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கல்வி கட்டணத்தை அரசு செலுத்துகிறது. அதே போன்று தமிழகத்திலும் கல்வி கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே இருந்த பாராளுமன்ற கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிலை அமையுமா? மேலும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும், கட்டிட வளாகத்தில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம். மேலும் எதிர்கட்சிகள் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது கொள்கை ரிதியாக நியாயமானது.

    இந்திய குடியரசு கட்சியும் இதனை ஆதரிக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது இந்தியா முழுவதும் மத்தியில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக செயல்படுகிறவர்களுக்கு நடக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநில தலைமை நிர்வாகிகள் தன்ராஜ், கவுரிசங்கர், மாவட்ட தலைவர் வக்கீல் சிவகுமார், மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன், மாவட்ட பொருளாளர் ராஜாராம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • கணவனை இழந்த பெண்ணுக்கு இயற்கை மரண உதவித்தொகை
    • சப்- கலெக்டர் வழங்கினார்

    நெமிலி,

    நெமிலி தாலுகா, நாகவேடு கிராமத்தில் வசித்து வரும் பன் னீர்செல்வம் என்பவரின் மனைவி உமா நெமிலி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் இயற்கை மரண உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தார்.

    அவரின் மனு பரிசீலிக்கபட்டு வருவாய் தீர்வாய அலுவலரும், சப்-கலெக்ட ருமான பாத்திமா இயற்கை மரண உதவித்தொகை ரூ.20 ஆயிரத்திற்கான ஆணையை வழங்கினார்.

    இதில் நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், தலை மையிடத்து தாசில்தார் பன்னீர்செல்வம், நாகவேடு கிராம நிர்வாக அலுவலர் சதிஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்,

    திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காட்டை அடுத்த பெரிய களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 75), ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர்.

    இவர், சென்னை பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக இரவு 11.30 மணியளவில் திருவலாங்காடு ரெயில் நிலையத்தில் இறங்கியுள்ளார்.

    பின்னர் நடைமேடையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக உட்கார்ந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு
    • கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்

    சோளிங்கர் :

    சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சோளிங்கர் உள்வட்டத்திற்குட்பட்ட சோளிங்கர், சோம சமுத்திரம், வெங்குப்பட்டு, பரவத்தூர் உள்ளிட்ட 15 வருவாய் கிராமங்களின் வருவாய் ஆவண கணக்குகளை ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

    பொது மக்கள் அளித்த மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நீர்நிலை மற்றும் ஏரி நீர் பாசன கால்வாயை ஆக்கிரமித்து தனிநபர் கட்டியுள்ள கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நக ராட்சி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மற்றும் அரசு மருத்துவமனை அருகே ஏரி பாசன கால்வாயில் கட் டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தை அகற்றி நீர் நிலை மற்றும் ஏரி பாசன கால்வாய்களை பாதுகாக்க வேண் டும் என காங்கிரஸ் நகர தலைவர் டி.கோபால் மனு அளித்தார்.

    கலெக்டர் அலுவலக பொதுமேலாளர் (நீதியியல்) விஜய குமார், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜகோபால், சானு, கணேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நில அளவிற்காக வைக்கப் பட்டிருந்த நில அளவீடு சங்கிலியை மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் பார்வையிட்டு உறுதி செய்தார்.

    • நேருக்குநேர் மோதியது
    • பேலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56).

    இவர் நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை தனியார் திரையரங்கம் அருகே தனது மோட்டர் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த சோளிங்கர் அடுத்த நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தீனா (21) ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் சரவணன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த தீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 29-ந் தேதி நடைபெறாது
    • மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

    ராணிப்பேட்டை,

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி முடிய ஜமாபந்தி நடைபெறுகிறது.

    இதனால் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ள "மக்கள் குறைதீர்வு நாள்" கூட்டமானது நடைபெறாது மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் அனைத்து விதமான மனுக்களையும் சம்மந்தப்பட்ட வருவாய் வட்டங்களில் நடைபெறும். ஜமாபந்தியில் கொடுக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசராணை

    ராணிப்பேட்டை,

    ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த ஏத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(28) கூலி தொழிலாளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அங்கு வந்த வேல்முருகன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் வேல்முருகனை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    இதற்கு வேல்முருகன் எனக்கும் இந்த கர்ப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி திருமண செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்
    • ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்

    அவர் பேசியதாவது:-

    நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தொடக்க நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் மறுநாளில் தேர்வு நடத்தி அவர்களின் அறிவை பரிசோதிக்க வேண்டும்.

    புரியவில்லையென்றால் மீண்டும் புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அடிக்கடி நடத்தப்பட்ட பாடங்களில் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறமையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தனி பயிற்சிகள்

    அதேபோல கற்றல் அறிவு குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து. அவர்களுக்கென தனி பயிற்சிகள் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களின் முக்கிய குறிக்கோள் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்,

    ஆசிரியர்களுக்குள் உள்ள பிரச்சனைகளை களைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவதை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கண்காணிக்க வேண்டும்.

    தனி கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும்

    அதேபோல 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு புரிந்துக் கொள்ளும் வகையில் நல்ல முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.

    இவர்களால் தான் 10,11,12 ம் வகுப்பிற்கு வரும் பொழுது நல்ல தேர்ச்சியை கொடுக்க முடியும். ஆகவே 6-ம் வகுப்பு முதல் மாணவ, மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும்.

    இது மிகவும் முக்கியமானது. சரியாகபடிக்காத பிள்ளைகளின் பெற்றோர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும்.

    வரும் கல்வியாண்டில் புதிதாக பணி மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள் அல்லது பணி பெற்று வரும் ஆசிரியர்கள் இரண்டு மூன்று மாதத்திலேயே மற்ற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

    பணி செய்யும் இடத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்றுவதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×