என் மலர்
நீங்கள் தேடியது "To teach"
- புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்
- ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்
அவர் பேசியதாவது:-
நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தொடக்க நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் மறுநாளில் தேர்வு நடத்தி அவர்களின் அறிவை பரிசோதிக்க வேண்டும்.
புரியவில்லையென்றால் மீண்டும் புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அடிக்கடி நடத்தப்பட்ட பாடங்களில் தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறமையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனி பயிற்சிகள்
அதேபோல கற்றல் அறிவு குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து. அவர்களுக்கென தனி பயிற்சிகள் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்களின் முக்கிய குறிக்கோள் வரும் கல்வியாண்டில் கட்டாயமாக 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்,
ஆசிரியர்களுக்குள் உள்ள பிரச்சனைகளை களைந்து ஒற்றுமையுடன் பணியாற்றுவதை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கண்காணிக்க வேண்டும்.
தனி கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும்
அதேபோல 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு புரிந்துக் கொள்ளும் வகையில் நல்ல முறையில் பாடங்கள் நடத்தப்பட வேண்டும்.
இவர்களால் தான் 10,11,12 ம் வகுப்பிற்கு வரும் பொழுது நல்ல தேர்ச்சியை கொடுக்க முடியும். ஆகவே 6-ம் வகுப்பு முதல் மாணவ, மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமானது. சரியாகபடிக்காத பிள்ளைகளின் பெற்றோர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும்.
வரும் கல்வியாண்டில் புதிதாக பணி மாறுதல் பெற்று வரும் ஆசிரியர்கள் அல்லது பணி பெற்று வரும் ஆசிரியர்கள் இரண்டு மூன்று மாதத்திலேயே மற்ற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
பணி செய்யும் இடத்தில் மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்றுவதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






