என் மலர்
ராணிப்பேட்டை
- காதலியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
அரக்கோணம் தாலுகா மூதூர் கிராமம் ஆச்சாரி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் உலகநாதன் (வயது 21).
இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இவர் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தனது காதலியுடன் வந்தார். அங்கு பெரியமலை யோக நரச்சிம்மர் மலையில் உள்ள 600-வது படிக்கட்டு அருகில் உலக நாதனுக்கும்.
அவரது காதலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது காதலியின் துப் பட்டாவால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொண்டபாளையம்போலீ சார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து யாரும் புகார் கொடுக்கவில்லை. உலகநாதனுடன் வந்த அவரது காதலி என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னால் வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பெண்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். பின்னர் வீடு திரும்புவதற்காக நேற்று மாலை பூட்டுத்தாக்கில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஆட்டோவில் வந்தனர்.
மேல்விஷாரம் தனியார் மருத்துவமனை அருகே வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பின்னர் அந்த வாகனம் ஆட்டோ டிரைவர் மீது ஏறிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை. கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் யார், ஆட்டோ டிரைவர் யார் என்பன குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மனுக்கு பொங்கல் வைத்தும், அலகு குத்தி நேர்த்தி கடன்
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரினம்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பேரூராட்சி, கொண்டாபுரம் பகுதி, கண் ணாங்குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மதியம் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உடல் நிலை சரியில்லாததால் விரக்தி
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த மேல்வேலம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ரமேஷ்(23) லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ரமேஷ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு வயிற்று வலி வந்துள்ளது. வலி தாங்க முடியாமல் ரமேஷ் வீட்டில் உள்ள பேனில் வேட்டியை கொண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.
- ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
- அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 138 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முன்பெல்லாம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும்போது அதிகமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிட வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது.
ஏனென்றால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் கடந்த 2 வருடங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.
மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகின்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.
கடந்த ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் 205 மனுக்கள் வரப்பெற்றது.
இதில் 138 மனுக்கள் விசாரனையின் அடிப்படையில் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்ப ப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமை மாறி தற்பொழுது மக்களைத் தேடிவந்து குறைகளை கேட்டறிந்து நலத்திட்டங்களை அரசுத வழங்கி வருகிறது.
மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத், உதவி கலெக்டர் வினோத்குமார், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, தாசில்தார்கள் நடராஜன், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை,
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி. இவர் வாலாஜா அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துள்ளார். வரும் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 25-ந் தேதி நெமிலி அருகே உள்ள கோவிலில் வாலிபர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சோளிங்கர் தாலுகா அலுவலகத்தைச் சேர்ந்த ஊர் நல அலுவலர் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி திருமணம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து கொண்ட வாலிபர் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
- சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துக்கடை பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சந்திரமோகன், இணை செயலாளர் சந்தியா, மாநில செயற்குழு உறுப்பினர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணை செயலாளர் சித்ரா வரவேற்றார். மாவட்ட செயலாளர் பரமசிவம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.மாநில செயலாளர் சுமதி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சேகர், ஜோசப் கென்னடி, பாபு, பருதி இளம்வழுதி, புஷ்பராஜ் மற்றும் சத்துணவு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
- அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார்
- போலீசார் விசாரணை
காவேரிப்பாக்கம்:
பாணாவரத்தை அடுத்த மகேந்திரவாடி கிராமம், பெரிய தெருவை சேர்ந்தவர் மனைவி பாரதி (வயது 32). இவர் அதே ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் துணி துவைத்துக் கொண்டி ருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே பாடபிரிவு வேண்டாம்
- மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் 11 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு விழுதுகளை வேர்களாக்க எனும் உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
உயர்கல்வியில் சேரும் மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒரேவித பாடத்தினை தேர்ந்தெடுக்காமல் இன்றைய காலக்கட்டத்தில் எவ்வித படிப்பு நமக்கு பயனுள்ளதாகவும்.
வேலை வாய்ப்புள்ளதாகவும் அமையும் என்பதை அறிந்து பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரே பாடப் பிரிவுகளை அனைவரும் தேர்ந்தெடுக்கக் கூடாது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த படிப்புகளிலேயே பல்வேறு வகையிலான படிப்புகள் உள்ளது.
அதே போன்று உங்களின் தனித்திறமைகளையும் படிக்கும் போதே வார்த்துக் கொள்ளுங்கள், இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான குறுகிய கால படிப்புகள் இணையம் வாயிலாகவும், பல்வேறு கல்லூரிகளிலும் நடத்துகின்றார்கள்.
அதில் சேர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆங்கிலம் பேசும் அறிவினையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஏதாவது தங்களுக்கு பிடித்த கைத்தொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கைவினைப் பொருட்களுக்கு என்றுமே சந்தையில் விற்பனை வாய்ப்பு அதிகம்.
அது நமக்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தரும் இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம்.
அதில் எந்த அளவில் நமக்கு பயன் உள்ளதோ அதே அளவில் ஆபத்தும் உள்ளது என்பதை உணர்ந்து கவனமுடன் பயன்ப டுத்துங்கள், அனைத்து மாணவ, மாணவியர்களும் உயர்கல்வியில் சேர்ந்து நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, பயிற்சியாளர்கள் கோபி, முருகானந்தம், சிவானந்தன், அமுதமணி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அமர்நாத் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடக்கும் முறைகேடான மாறுதல்களை உடனே நிறுத்த வேண்டும், இதுவரை போடப்பட்ட அனைத்து முறைகேடான மாறுதல்களையும் திரும்ப பெற வேண்டும், வெளிப்படையான நேர்மையான கலந்தாய்வு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும், பதவி உயர்விற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி தேவையி ல்லை என்னும் கொள்கை முடிவு எடுத்து பதவி உயர்வுடன் முழுமையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கிளை பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கினார்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). போலீஸ்காரர்.
இவரது மனைவி யமுனா (34). இவர்களுக்கு பிரத்தியா (8), சஞ்சனா (4) என 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சதீஷ்குமாருக்கு காலில் அடிபட்டதால் பணிக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு இவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் உறவினர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாடவாரியாக சேர்க்கைகள் நடைபெறும்
- நாளை தொடங்குகிறது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை அந்தமான் நிக்கோபார் மாண வர்கள், பாதுகாப்பு படை வீரர்களின் வாரிசுகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நாளை காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முதற்கட்ட மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி பி.எஸ்சி கணினி அறிவியல் பாடப் பிரிவிற்கும், 6-ந்தேதி பி.காம் வணிகவியல், 7-ந் தேதி பி.ஏ ஆங்கிலத்துறைக்கும், 8-ந் தேதி பி.ஏ.தமிழ்துறைக்கும், 9-ந் தேதி பி.எஸ்சி கணிதத்திற்கும் என பாடவாரியாக சேர்க்கைகள் நடைபெறும்.
கல்லூரியில் இருந்து தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்ப டையில் தெரிவு செய்யப்பட்டு குறுஞ்செய்தி அழைப்பு மூலம் அழைக்கப்பட்ட மாணவர்கள் மட்டும் சேர்க்கை கலந்தாய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) என். சுஜாதா தெரிவித்துள்ளார்.






