வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு

ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ஜமாபந்தி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
ஜமாபந்தி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது எடுத்த படம்.
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 138 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முன்பெல்லாம் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும்போது அதிகமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கிட வருவார்கள். அந்த நிலை தற்போது மாறியுள்ளது.

ஏனென்றால் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான மக்களாட்சியில் கடந்த 2 வருடங்களில் மக்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை சிந்தித்து செயல்படுத்தி வருகின்றார். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

உங்களின் கோரிக்கை மனு நியாயமானதாகவும், உண்மைத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். அதற்கு யாருடைய தயவும் தேவையில்லை.

கடந்த ஒரு வாரம் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி மூலம் 205 மனுக்கள் வரப்பெற்றது.

இதில் 138 மனுக்கள் விசாரனையின் அடிப்படையில் ஏற்கப்பட்டது. 38 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்ப ப்பட்டுள்ளது. 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசைத் தேடி மக்கள் சென்ற நிலைமை மாறி தற்பொழுது மக்களைத் தேடிவந்து குறைகளை கேட்டறிந்து நலத்திட்டங்களை அரசுத வழங்கி வருகிறது.

மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றித் தரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கலால் உதவி ஆணையர் சத்தியபிரசாத், உதவி கலெக்டர் வினோத்குமார், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, தாசில்தார்கள் நடராஜன், ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com