என் மலர்
ராணிப்பேட்டை
- வருகிற 25-ந் தேதி நடக்கிறது
- விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சங்க இணை செயலாளரிடம் வழங்கலாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட், சங்க தலைவர் சந்தோஷ் காந்தி, செயலாளர் செல்வகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 14 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது உட்பட்ட வீரர்களுக்கான மாவட்ட தேர்வு முகாம் தேர்வு வருகிற 25-ந் தேதி காலை 7.30 மணிக்கு ராணிப்பேட்டை இ.ஐ.டி.பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது.
தேர்வு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் கள் வயது வரம்பு -1.9.2009 தேதிக்கு மேல் பிறந்தவராக இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை இ.ஐ.டி.பாரி மைதானத்தில், தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை பெற்று பூர்த்தி செய்து சங்க இணை செயலாளர் பாஸ்கரிடம் (செல் -9842326373) வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரூ.15.5 லட்சம் மதிப்பில் அமைகிறது
- கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த வாங்கூர் ஊராட்சி, வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.15.5 லட்சம் மதிப்பில் மேநீர் தேக்கத்தொட்டி கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடந்தது.
வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேநீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.
அதேபோல் வாங்கூர் கிராமம், நத்தம் பேட்டையில் சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.7.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடம் திறப்பு விழாவும் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் கள்ளச்சந்தையில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க வலியுறுத்தி முத்துக்கடை பஸ் நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி வரவேற்றார்.
போராட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளசந்தையில் 24 மணி நேரமும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் எம்.கே.முரளி, மாவட்ட பொருளாளர் ஞானசெளந்தரி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இளங்கோ, நிர்வாகிகள் வக்கீல். ஜானகிராமன், கிரிகுமரன், கதிர்வேலன், கஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர்.
- தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை
- அதிகாரி தகவல்
நெமிலி:
நெமிலி சுற்று வட்டார பகுதிகளான வேட்டாங்குளம், ரெட்டிவலம், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது.
இதனால் அப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு நேற்று பயிர் சேதங்களை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வடமலை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது 43 ஏக்கர் நெற்பயிர் மழையால் லேசாக சேதமடைந்துள்ளது. எனவே தகுதியான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி வேளாண்மை அலுவலர்கள் நவமணி, ஸ்ரீபிரியா, செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- ரூ.25 லட்சத்தில் திட்டமிடப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
- ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைப்பதாக அமையும்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த இரண்டாடி ஊராட்சியில் உள்ள ஏரி முன்னூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இந்த கிராமத்தை ஒட்டி செல்லும் பொன்னையாற்றை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கான சுடுகாடு, ஆற்றைத் தாண்டி எதிர்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், உடலை ஆற்றை கடந்துதான் சுடுகாட்டிற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்ல வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் வந்துவிட்டால், ஆற்றை கடந்து செல்வது மிகவும் கடினம்.
எனவே ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி சோளிங்கர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூர்ணசந்திரன், வழக்கறிஞர் உதயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜூ வர்மா, இரண்டாடி ஊராட்சி மன்ற தலைவர் சுதாபாபு, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஏரிமுன்னூர் பகுதிக்கு வந்தனர்.
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலம் திட்டமிட்டபடி அமைந்தால் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கக்கூடிய மேம்பாலமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நீதிபதிகள் பங்கேற்பு
- தியான பயிற்சியில் ஈடுபட்டனர்
ராணிப்பேட்டை:
உலக யோகா தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, மாஜிஸ்திரேட் நவீன் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகா மாஸ்டர் வஜ்ஜிரவேல், பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் தியானம் பயிற்சி அளித்தனர்.
இதில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் ஜான் சாலமன்ராஜா நன்றி கூறினார்.
இதே போல் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்திய யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கபில்தேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுராசனம், வஜ்ஜிராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.
- 50 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் (250 கோழிகள் / அலகு) அமைத்திட 3 அலகுகள் குறியீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயனாளியாக தேர்ந்தேடுக்க ப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிக்கான மொத்த செலவில் 50 சதவிகித மானியம் ரூ.1லட்சத்து 50 ஆயிரத்து 625 மாநில அரசால் வழங்கப்படும்.
மீதமுள்ள 50 சதவிகித பங்களிப்பு வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும். பயனாளிகள் அதே கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர். திருநங்கைகள், மாற்று திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களது ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்தின் சிட்டா, அடங்கல் நகல், 50 சதவிகித தொகை அளிப்பதற்கான வங்கி இருப்பு விவரம், வங்கி கடன் ஒப்புதல் விவரம், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23-ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றுடன் விண்ணப்பத்தை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் வருகிற 26-ந் தேதிக்குள் சமர்பித்திடுமாறு கலெக்டர் வளர்மதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- ஜூலை 1-ந் தேதி முதல் அமல்
- ஐ.எஸ்.ஐ முத்திரையிடப்படாத பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை
ராணிப்பேட்டை:
இந்திய தர நிர்ணயம் அமைப்பின் கிளை அலுவலகம் சார்பில், அனைத்து பொருள்களுக் கான புதிய தர நிர்ணயம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
தொடர்ந்து இந்திய தரநிர்ணய அமைப்பின் தலைவர் பவானி கூறியதாவது:-
இந்திய தர நிர்ணய அமைப்பின் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களுக்கு தர நிர்ணயங்களை உருவாக்கியுள் ளது. தற்பொழுது ஜனவரி 2023 முதல் கால்நடை தீவனங்களும் முத்திரையிட்டு விற்பனை செய்யப்படுவதை அங்கீகரித்துள்ளது. ஆகவே ஐ.எஸ்.ஐ முத்திரை பதிக்கப்படாத தீவனங்கள்
விற்பனை செய்வதைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல 24 வகையான தோல் உற்பத்தி பொருள்களுக் கும் வரும் ஜூலை 1-ந் தேதி முதல் தர நிர்ணயம் கட்டாயமாக் கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அனைத்து வகையான தோல் பொருள்களுக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத் தில் பெரிய தோல் உற்பத்தி நிறுவ னங்கள் ஏற்கனவே அனுமதிபெற் றுள்ளன. மேலும், குறு சிறு மற் றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் தரக் கட்டுப்பாட்டை பெற உள்ளன.
ஐ.எஸ்.ஐ முத்திரையிடப்படாத பொருட்களை விற்பனை செய்வதைக் கண்டறிந்தாலோ அல்லது உற்பத்தி செய்ததை விற் பனைக்கு கொண்டு வரும் நிறுவ னங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இந்திய தர நிர்ணய அதரக்கட்டுப்பாட்டு களை அனைத்து நுகர்வோர்க ளும் எளிதில் உடனுக்குடன் தங்கள் கைப்பேசியிலேயே தெரிந்து கொண்டு பொருள்களின் தரத்தை உறுதி செய்யும் வகை யில் செயலியை அறி முகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நுகர்வோரும் தரமான பொருள்களை இந்த செயலியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, இந் திய தர நிர்ணயம் துணை இயக் குநர் தினேஷ் மற்றும் அனைத் துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வழிப்பறியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சென்னையை சேர்ந்த சூர்யா (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் கலெக்டர் வளர்மதி, சூர்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- போக்சோவில் மேஸ்திரி கைது
- ஜெயிலில் அடைத்தனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி. இவர் அதேபகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ராணிப்பேட்டை:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில், 108 கலச திருமஞ்சன நிறைவு விழா மற்றும் ஆஷாட நவராத்திரி தொடக்க விழா ஆகியவை நடைபெற்றது.
நிறைவு விழா முன்னிட்டு தன்வந்திரி ஹோமத்துடன், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், 500 லிட்டர் பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்பட 21 வகையான திரவியங்கள் கொண்டு 9 அடி உயர மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு மகா அபிஷேகம், அர்ச்சனை புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றது.
ஆஷாட நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராகி அம்மனுக்கு விஷேச ஹோமம் மற்றும் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற நகர, கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- வாக்குவாதத்தால் பரபரப்பு
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில், சாலைகள் சரிவர பராமரிக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது.
குடிநீர் வினியோகம் சரிவர நடைபெறுவதில்லை, மின்விளக்குகளும் பராமரிக்கப்படுவதில்லை என்பது உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என கூறி அந்த வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் புறக்கணிக்க படுவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் முற்றுகையிட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் தாங்கள் நகரமன்ற தலைவரை சந்தித்து முறையிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர மன்ற உறுப்பினர் ஜோதி சேதுராமன் மற்றும் பொதுமக்களில் சிலர் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத்தை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் செய்து தராததை கூறி முறையிட்டனர்.
அப்போது இரு தரப்பினரிடையேயும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் நகரமன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் 26-வது வார்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தில் நகர அ.தி.மு.க.செயலாளர் கே.பி.சந்தோஷம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சேதுராமன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






