என் மலர்
ராணிப்பேட்டை
- வருகிற 30-ந்தேதி நடக்கிறது
- சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடப்பு ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந்தேதிகாலை 10.30 மணிக்கு கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் வேளாண்மை, தோட்ட க்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை, பட்டுவளர்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, நீர்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்க ட்டுபாடு வாரியம், மின்சாரம், போக்கு வரத்து மற்றும் பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை களைந்திட இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொது பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்து பயன்பெறலாம்.
- சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை யொட்டி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. திரவுபதி அம்மன், அர்ஜூனன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து அம்மனுக்கு பட்டாடை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இயற்கை உரங்கள் தயார் செய்வதை பார்வையிட்டார்
- விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் வழங்கினார்
நெமிலி:
காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்து வேளாண் விதை பொருட்கள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு பதிவு செய்து வழங்கப்படுவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுவது குறித்த பதிவேட்டை பார்வையிட்டார். பின்னர் 6 விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள், உளுந்து விதைகள், ஜிப்சம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள மண் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மையத்தில் மட்டும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து வேகாமங்கலம் ஊராட்சியில் இயற்கை உரங்கள் தயார் செய்வதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி (வேகாமங்கலம்), சங்கீதா ஜெயகாந்தன் (ஓச்சேரி) கலந்து கொண்டனர்.
- அரக்கோணம் வட்டார வேளாண்மை மையம் அறிவிப்பு
- வருகிற 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்
அரக்கோணம்:
பிரதம மந்திரியின் கிசான் ஊக்கத்தொகை 4 மாதத்திற்கு ரூ 2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
14-வது தவணை தொகையை பெற வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நிதி வரவு நிறுத்தப்படும்.
எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை இணைத்தும் e KYC செய்தும் பயனடையுமாறு அரக்கோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.
- போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது
- மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குவது குறித்து ஆலோசனை
நெமிலி:
ராணிப்பேட்டைமாவட்டம்,காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தீபிகா முருகன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி அலுவலக வேலை நேரங்களான காலை 8 முதல் 11 மணிவரையிலும் மற்றும் மாலை 4 முதல் 7 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
ஆதலால் வணிக பொருட்களை ஏற்றிவரும் லாரிகளுக்கு போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள நேரங்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணிக்கு மேல் பொருட்களை இறக்குதல் பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், போலீசார்,வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- ரூ.6.82 கோடி மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டப்பட உள்ளது
- நகராட்சி ஆணையாளர், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் 194 கடைகள் அமைந்துள்ளன.
இந்த கடைகள் பழுதடைந்து இருப்பதால் இடித்துவிட்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6.82 கோடி மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டப்பட உள்ளது.
இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி ஆணையாளர் லதா கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
இந்நிலையில் அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையாளர் லதா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் எத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர் சரவணன் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வணிகர் சங்கத்தினர் ஜூலை 5-ந் தேதி வரை கடைகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகளில் நகராட்சி ஈடுபடக்கூடாது.
நாங்கள் அதற்குள்ளாக கடைகளை காலி செய்து கொள்கிறோம் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர் . இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது .
அதே நேரம் இடைப்பட்ட காலத்தில் கடை உரிமையாளர்கள் யாரும் கோர்ட்டை நாடக்கூடாது என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வணிகர் சங்கத்தினர் ஒப்புக்கொண்டனர்.
- போலீஸ் நிலையத்தில் புகார்
- தீவிரமாக தேடி வருகின்றனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இந்த சிறுவர் இல்லத்திலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இல்லத்திலிருந்து பள்ளிக்கு சென்ற மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பாலமுருகன் (15) இவர் 10-ம் வகுப்பு செல்லவில்லை. திரும்ப இல்லத்திற்கும் வரவில்லை.
இதை தொடர்ந்து இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம், வாலாஜா ரோடு ரெயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
இதனையடுத்து சிறுவர் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கண்ணன் ராதா நேற்று ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் ராணிப்பேட்டை போலீசாரர் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்
- கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ரேணுகாதேவி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது.
மீறினால் அபராதம் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்துதல்,
கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் நீர் நிலைகளை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குப்பைகளை சேகரிக்க வீடுகளுக்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டது.
இதில் பேரூராட்சி துணை தலைவர்,மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 66) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்காக சிகிச்சை பெற்று சில மாதங்களாக மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த
14-ந் தேதி அதிகளவில் மாத்திரைகளை ஜெகதீசன் சாப்பிட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜெகதீசனை அவரது குடும்பத்தினர் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் பயன்பெறலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும் 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை. சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி,பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்க்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம்,எலும்பியல் மற்றும் மனநல மருத்துவம்,காசநோய் பரிசோதனை மற்றும் தொழுநோய் உள்பட அனைத்திற்கும் சிறப்பு மருத்துவர்களால் பன்னோக்கு மருத்துவ சிகிச்சையும், இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாளு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 60) இவர் கடந்த 12-ந் தேதி வங்கிக்கு சென்று ரூ.5 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது பைக்கின் பெட்டியில் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது வழியில் சோளிங்கர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். வெளியே வந்து பார்த்தபோது பைக் பெட்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலாஜாவை சேர்ந்த பிரதீப்குமார் (22) என்பவர் கோவிந்தராஜின் பணத்தை திருடியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் பிரதீப்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை கைப்பற்றினர்.
- 313 மனுக்கள் பெறப்பட்டது
- ரூ. 1.4 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மருதாலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணிபெரியசாமி, தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் செல்வி வரவேற்றார்.
இந்த முகாமில் மொத்தம் 313 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 293 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன.






