என் மலர்
நீங்கள் தேடியது "5-Date till date"
- ரூ.6.82 கோடி மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டப்பட உள்ளது
- நகராட்சி ஆணையாளர், கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட்டில் 194 கடைகள் அமைந்துள்ளன.
இந்த கடைகள் பழுதடைந்து இருப்பதால் இடித்துவிட்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6.82 கோடி மதிப்பீட்டில் புதியதாக கடைகள் கட்டப்பட உள்ளது.
இதனால் இங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி ஆணையாளர் லதா கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்.
இந்நிலையில் அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரிஷ்அசோக் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் நகராட்சி தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையாளர் லதா, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் எத்திராஜ், மாவட்ட துணைத் தலைவர் சரவணன் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வணிகர் சங்கத்தினர் ஜூலை 5-ந் தேதி வரை கடைகளை காலி செய்வதற்கான நடவடிக்கைகளில் நகராட்சி ஈடுபடக்கூடாது.
நாங்கள் அதற்குள்ளாக கடைகளை காலி செய்து கொள்கிறோம் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர் . இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது .
அதே நேரம் இடைப்பட்ட காலத்தில் கடை உரிமையாளர்கள் யாரும் கோர்ட்டை நாடக்கூடாது என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு வணிகர் சங்கத்தினர் ஒப்புக்கொண்டனர்.






