என் மலர்
உள்ளூர் செய்திகள்

உழவர் நலத்துறை பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- இயற்கை உரங்கள் தயார் செய்வதை பார்வையிட்டார்
- விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் வழங்கினார்
நெமிலி:
காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்து வேளாண் விதை பொருட்கள், உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு பதிவு செய்து வழங்கப்படுவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுவது குறித்த பதிவேட்டை பார்வையிட்டார். பின்னர் 6 விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள், உளுந்து விதைகள், ஜிப்சம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள மண் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இம்மையத்தில் மட்டும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து வேகாமங்கலம் ஊராட்சியில் இயற்கை உரங்கள் தயார் செய்வதை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையுப்தீன், தண்டாயுதபாணி, ஒன்றிய பொறியாளர் ஏகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி (வேகாமங்கலம்), சங்கீதா ஜெயகாந்தன் (ஓச்சேரி) கலந்து கொண்டனர்.






