என் மலர்
நீங்கள் தேடியது "Overpass inspection"
- ரூ.25 லட்சத்தில் திட்டமிடப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
- ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைப்பதாக அமையும்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த இரண்டாடி ஊராட்சியில் உள்ள ஏரி முன்னூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இந்த கிராமத்தை ஒட்டி செல்லும் பொன்னையாற்றை கடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் அதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கான சுடுகாடு, ஆற்றைத் தாண்டி எதிர்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், உடலை ஆற்றை கடந்துதான் சுடுகாட்டிற்கு அடக்கம் செய்ய கொண்டு செல்ல வேண்டும். மழைக்காலங்களில் தண்ணீர் வந்துவிட்டால், ஆற்றை கடந்து செல்வது மிகவும் கடினம்.
எனவே ஆற்றை கடந்து செல்ல மேம்பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன்படி சோளிங்கர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூர்ணசந்திரன், வழக்கறிஞர் உதயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜூ வர்மா, இரண்டாடி ஊராட்சி மன்ற தலைவர் சுதாபாபு, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஏரிமுன்னூர் பகுதிக்கு வந்தனர்.
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் முதல் கட்டமாக ரூ.25 லட்சத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த பாலம் திட்டமிட்டபடி அமைந்தால் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை இணைக்கக்கூடிய மேம்பாலமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






